சவால் விடும் வகையில் இந்தியாவுக்கு வரும் டெஸ்லா கார் !

பல நாடுகளில் பெரிய கார்களுக்கே சவால் விடும் வகையில் எலெக்ட்ரிக் கார்கள் தயாராகி, வெற்றி கரமாக விற்பனையும் ஆகின்றன. அதில் லேட்டஸ்ட் ரிலீஸ், ‘டெஸ்லா மாடல்-3.’
சவால் விடும் வகையில் இந்தியாவுக்கு வரும் டெஸ்லா கார் !
2017-ம் ஆண்டில் தான் டெஸ்லாவின் மாடல்-3 காரின் உற்பத்தி தொடங்கப் படுகிறது. காரின் விலை $35,000 (இந்திய மதிப்பில் 23.21 லட்ச ரூபாய்) இருக்கும். 

ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்ய டெஸ்லா திட்ட மிட்டுள்ளது.

ஆனால், இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப் படும் என்பதால், காரின் விலை இதை விட இங்கே கூடுதலாகத் தான் இருக்கும்.

காரில் 5 பேர் அமர்ந்திருந் தாலும், 0-100 கி.மீ வேகத்தை 6 விநாடி களுக்கும் குறைவான நேரத்திலே எட்ட முடியும் என்பதுடன், 

காரின் முழு சார்ஜ் செய்யப் பட்ட 65KWh லித்தியம் - ஐயான் பேட்டரிகள் வாயிலாக, 402 கி.மீ தூரம் வரை செல்ல முடியும்.

இந்த காரின் பேட்டரி களை விரைவில் சார்ஜ் செய்ய, மக்கள் அதிகம் கூடும் இடங்க ளான ஷாப்பிங் மால், திரை யரங்குகள், ரயில்வே ஸ்டேஷன் போன்ற 

இடங்களில் சூப்பர் சார்ஜர்கள் உடனான எனர்ஜி ஸ்டேஷன் களை அமைக்க டெஸ்லா திட்ட மிட்டுள்ளது.

இரண்டு பூட் ஸ்பேஸ்கள், அதிக இடவசதி, பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோ பைலட் வசதி, 15 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோ டெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட் ரோல் சீட்கள், 2 வீல் டிரைவ் -
4 வீல் டிரைவ் என வசதிகளின் பட்டியல் மிக நீளம். டெஸ்லா மாடல்-3 காரின் புக்கிங் துவங்கப்பட்ட 24 மணி நேரத்தில், 1.15 லட்சம் கார்கள் அதிகாரப் பூர்வமாக முன் பதிவு செய்யப் பட்டுள்ளன. 

டெஸ்லா வின் இணைய தளத்தில் 1,000 அமெரிக்க டாலரைச் செலுத்தி காரை புக்கிங் செய்யலாம். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வரை 3.25 லட்சம் கார்கள் புக் ஆகியிருக் கின்றன.
சவால் விடும் வகையில் இந்தியாவுக்கு வரும் டெஸ்லா கார் !
2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவை எலெக்ட்ரிக் கார்கள் கொண்ட நாடாக மாற்ற, 

மத்திய கனரக போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமை யிலான குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.  அதனால், இந்த காரின் வரவை நம் நாட்டில் 2018-ல் எதிர் பார்க்கலாம்.
Tags: