விமானத்துக்குள் பயணிகளை கலங்கடித்த கருங்குருவி !

0
கத்தார் விமானத்தில் கருங்குருவி ஒன்று, நடுவானில் சுமார் நான்கு மணி நேரம் பயணிகளைக் கலங்கடித்துள்ளது.
விமானத்துக்குள் பயணிகளை கலங்கடித்த கருங்குருவி !
கடந்த மாதம் 24-ம் தேதி, கத்தார் நாட்டு விமானம் பாங்காக்கி லிருந்து தோஹா சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

விமானம், சுமார் 39,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, பக்கிங்ஹாம் என்னும் பயணி, தன் லக்கேஜ் வைத்துள்ள இடத்தில் சிறிய பறவை ஒன்று பதுங்கி யிருப்பதைக் கவனித்தார். 

அதைத் தொட முயன்றதும், விமானத் தினுள் வட்டமிடத் தொடங்கி விட்டது. திடீரெனப் பறவை ஒன்று விமானத்தினுள் வட்டமிடுவதைப் பார்த்த பயணிகள் திகைத்துப் போனார்கள். 

சிலர், கைகளை உயர்த்தி பறவையை கேட்ச் பண்ண முயன்றனர். ஆனால் அந்த கறுப்பு நிற பறவையோ, யார் கையிலும் சிக்காமல் பறந்து கொண்டிருந்தது. 

விமானம் தரை யிறங்கியதும் வெளியே பறந்து சென்று விட்டது. பறவை செய்த சேட்டையைப் பயணி ஒருவர் வீடியோ எடுத்து, தற்போது பகிர்ந்துள்ளார்.
அந்தக் கருங்குருவி, விமானத் தினுள் வட்ட மிட்டுக் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத் தியது. நேரம் போகப் போக எங்களு க்குப் பழகி விட்டது. 

விமானம் தரை யிறங்கியதும் தானாக வெளியே பறந்து சென்று விட்டது’ என்று குறிப்பிட் டிருந்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings