விண்வெளியில் சொகுசு ஹோட்டலில் செலவு எவ்வளவு தெரியுமா?

0
அமெரிக்காவில் உள்ள ஒரு விண்வெளி நிறுவனம் முதல் முறையாக விண்வெளியில் ஓர் ஆடம்பர ஹோட்டல் கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது.

விண்வெளியில் சொகுசு ஹோட்டலில் செலவு எவ்வளவு தெரியுமா?
விண்வெளியில் முதல் முறையாக ஆடம்பர ஹோட்டல் ஒன்றைக்கட்ட இருப்பதாக அமெரிக்காவில் உள்ள ‘ஓரியன் ஸ்பேன்’ என்ற நிறுவனம் அறிவித் துள்ளது. 

இதன் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் வரும் 2021-ம் ஆண்டு முழு கட்டமைப்புப் பணிகளும் நிறைவு பெற்று அதன் பின் பயணிகள் தங்க அனுமதிக்கப் படுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஃபரான்க் பன்கெர் (Frank Bunger) `விண்வெளி யிலிருந்து பூமியைப் பார்க்கப் பலருக்கும் கனவு உண்டு 

இதை நிஜமாக்கவே இந்த முயற்சி. மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறை யாவது இந்த வாய்ப்பை அனுபவிக்க வேண்டும் என நாங்கள் எண்ணினோம், 

விண்வெளியில் அரோரா என்ற ஸ்பேஸ் ஸ்டேஷன் ராக்கெட் வடிவில் இருக்கும், பூமியிலிருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டப்பட உள்ளது. 
இவ்வளவு தூரத்தில் இது வரை ஒரு ஹோட்டல் கட்டப் பட்டது இல்லை. இந்த விண்வெளி ஹோட்டலில் தங்க ஒரு பயணத்தின் போது 6 பயணிகள் உள்பட எங்கள் குழுவை சேர்ந்த இரண்டு பேர் அனுமதிக்கப் படுவார்கள்.

மனிதர்களை அழைத்துச் செல்லும் முன் அவர்களுக்குத் தக்க பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப் படுவார்கள். விண்வெளியில் மிதந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை புவியில் இருப்பது போன்று சாதாரணமாக இருக்கலாம். 

இதற்காக அங்கு செயற்கை புவியீர்ப்பு விசை உருவாக் கப்பட உள்ளது. 12 நாள்கள் வரை பயணிகள் இங்குத் தங்க அனுமதிக்கப் படுவார்கள். 

அவர்கள் விண்வெளியில் தங்கும் போது ஒரு நாளுக்கு 16 சூரிய உதயமும் 16 சூரிய மறைவும் காணமுடியும்’ எனக் கூறினார்.

விண்வெளியில் சொகுசு ஹோட்டலில் செலவு எவ்வளவு தெரியுமா?
இந்த விண்வெளி பயணத்துக்கு, இந்திய பண மதிப்பின்படி சுமார் 61 கோடி ரூபாய் ($9.5m ) செலவாகும் மற்ற நிறுவனங்கள் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வாங்கும் பணத்தைவிட இது மிகக்குறைவு என்கிறார்கள் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். 

இதற்கான முன்பதிவு எப்போது தொடங்கும் என்ற அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியிடப் படவில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings