நிர்மலாதேவி ஆடியோ திட்டம் போட்டு தயாரிக்கப்பட்டது... துணைவேந்தர் !

நிர்மலா தேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப் பட்டது. பல்கலைக் கழகத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் இதைச் செய்துள்ளனர்.
நிர்மலாதேவி ஆடியோ திட்டம் போட்டு தயாரிக்கப்பட்டது... துணைவேந்தர் !
என மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் செல்லதுரை தெரிவித் துள்ளார்.

துணை வேந்தர் செல்லதுரை

தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள தனியார் கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் செல்ல துரை கலந்து கொண்டார். 

விழா முடிந்ததும் பத்திரிகை யாளர்களைச் சந்தித்த துணை வேந்தர் செல்லதுரை, `நிர்மலா தேவி பேசிய அந்த இரண்டு ஆடியோக் களில் என்ன இருக்கிறது 
என்று ஆராய்ந்தால் உங்களுக்கே உண்மை என்ன வென்று தெரியும். பல்கலைக் கழகத்தின் பெயரைக் களங்கப் படுத்துவது புரியும். 

சம்பந்தப்பட்ட கல்லூரி ஒரு தன்னாட்சி பெற்ற கல்லூரி, அதற்குத் தேர்வு நடத்துவதும், தேர்வுத் தாள் திருத்துவதும் அதே கல்லூரி தான். 

அப்படி இருக்க, பல்கலைக் கழகம் எப்படி அந்த மாணவி களுக்கு மார்க் போட முடியும்?.  மேலும், பி.ஹெச்.டி சீட் வாங்கித் தருகிறேன், ஸ்காலர்ஷிப் வாங்கிக் கொடுக்கிறேன் என்கிறார் நிர்மலா தேவி.

அந்த 4 மாணவிகள் இப்போது தான் இளங்கலை படித்துக் கொண்டிருக் கிறார்கள். அடுத்து முதுகலை படிக்க வேண்டும். 

அதில் 55 சதவிகித மார்க் வாங்க வேண்டும். அதன் பிறகு, பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிப்படி, நுழைவுத் தேர்வு எழுதி மதிப்பெண் வாங்கிய பிறகு தான் பிஹெச்.டி படிக்க முடியும். 
மேலும், ஸ்காலர்ஷிப் கொடுப்பது பல்கலைக் கழகம் இல்லை. பல்கலைக் கழக மானியக்குழு தான் கொடுக்கும். 

அப்படி இருக்க, பல்கலைக் கழகத்துக்கும் அந்த ஆடியோவுக்கும் அதைப் பேசிய நிர்மலாதேவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மோசடி செய்வதற்காகத் திட்டமிட்டு அந்த மாணவிகளைப் பேச வைத்துள்ளனர். அதற்குச் சட்ட விரோதமாகப் பல்கலைக் கழகத்தின் பெயர் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 

நான் துணை வேந்தராகப் பதவி யேற்ற போது பல்கலைக் கழகத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அனைத்தையும் சீர் செய்தேன். 

இது பல்கலைக் கழகத்தின் நலம் விரும்பாதவர் களுக்குப் பிடிக்க வில்லை. எனக்கு பல்வேறு சிக்கல்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கி றார்கள். 
சின்னச் சின்ன விஷயத்தைக் கூட பெரிய அளவில் அரசிய லாக்குகிறார் கள். இல்லாத கெடுதல்களைச் செய்து வருகிறார்கள்.

அவர்களின் வேலையாக இது இருக்குமோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றார் கொதிப்போடு.
Tags:
Privacy and cookie settings