ஆக்ஸிஸ் வங்கியை வாங்கும் கோட்டக் வங்கி?

0
கோட்டக் மஹேந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கியைக் கையகப் படுத்துவதற்கு சரியான தருணம் வந்து விட்டது' என வெளி நாட்டுத் தரகு நிறுவனம் நொமுரா தெரிவித் துள்ளது.
ஆக்ஸிஸ் வங்கியை வாங்கும் கோட்டக் வங்கி?

ொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் பிரச்னை பூதாகரம் எடுத்துள்ள நிலையில், தனியார் வங்கிகளும் வாராக்கடன் பிரச்னையில் நாங்களும் சளைத்தவர் இல்லை என்பது அண்மை செய்தியில் அறியலாம்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் ஆக்ஸிஸ் வங்கியும் வாராக்கடன் பிரச்னையில் சிக்கி இருக்கின்றன. 

இந்த நிலையில், ஆக்ஸிஸ் வங்கியைக் கையகப் படுத்த கோட்டக் வங்கி முயற்சி எடுத்து வருவ தாகச் செய்தி வெளியாகி யுள்ளது.

ஆக்ஸிஸ் வங்கி நிர்வாக த்தின் சொத்து மதிப்பை முறைப் படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அழுத்தம் கொடுத்து வருகிறது. 

மேலும், தலைமை நிர்வாகப் பதவியை ஒருவரே தொடர்ந்து நீடிப்பத ற்கும் எதிர்ப்பு தெரிவி த்துள்ளது. 

இந்த நிலையில் ஆக்ஸிஸ்-ன் தலைமை செயல் அதிகாரி யாக உள்ள ஷிக்கா சர்மா, டிசம்பர் மாதத்தில் பதவி விலக விருப்பம் தெரிவித் துள்ளார்.

குறுகிய காலத்தில் தலைமை நிர்வாகியும் பதவி விலக விருப்பம் தெரிவித் திருப்பது ரிசர்வ் வங்கியின் நம்பிக்கை யின்மை பட்டியலில் ஆக்ஸிஸ் வங்கி இருப்பது உறுதி செய்ய ப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆக்ஸிஸ் வங்கி சாராத ஒருவர் தலைமை செயல் அதிகாரியாக வருவதற் கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. 

இது ஆக்ஸிஸ் வங்கியைக் கோட்டக் வங்கி கையகப் படுத்துவதற்குச் சாதகமாக அமையும் என்று தெரிவித்துள்ளது நோமூரா.

கடந்த ஆண்டு, கோட்டக் வங்கி ஆக்ஸிஸ் வங்கியைக் கையகப் படுத்தும் முயற்சி மேற்கொண்டது. கடந்த ஓராண்டில் ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலை 30 சதவிகிதம் உயர்ந்திருக் கிறது. 

இந்த நிலையில், ஆக்ஸிஸ் வங்கி ஏற்றுக் கொள்ளும் கணிசமான தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. 

ிசர்வ் வங்கி, கோட்டக் வங்கியின் முதன்மையான முதலீட்டா ளர்கள் அதிகளவில் பங்கு வைத்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

இதனால், கோட்டக் வங்கியின் முதன்மை முதலீட்டா ளர்கள் தன்னிடம் உள்ள பங்கு மதிப்பைக் கொண்டு ஆக்ஸிஸ் வங்கியைக் கையகப் படுத்த வாய்ப் புள்ளது. 

இதன் மூலம், அதிக கிளைகள் கொண்ட வங்கியா கவும், ஹெச்.டி.எஃப்.சி-க்கு இணையான வணிகத் திறன் கொண்ட தாக வங்கியாகக் கோட்டக் வங்கி மாறும். 

ஏற்கெனவே, கோட்டக் வங்கி ஐ.என்.ஜி வைஸ்யா வங்கியைக் கையகப் படுத்தி யுள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings