கன்னியாகுமரி சாமித்தோப்பில் விமான நிலையம் | Airport in Kanyakumari !

0
கன்னியாகுமரியை அடுத்த சாமித்தோப்பில் ஏர்போர்ட் அமையும் இடத்தில் ஓடுதளம் அமைக்கும் இடம் குறித்து மத்திய விமானத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.


ஓடுதளம் அமைக்கும் இடம் குறித்து மத்திய விமானத் துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

கன்னியா குமரியை அடுத்த சாமித்தோப்பு பகுதியில் விமான நிலையம் அமைப்பதற் காக மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

அதற்கான முதல் கட்ட ஆய்வுப் பணிக்காகத் தமிழக முதல்வர் ரூ.13.50 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார். 

கடந்த நான்கு மாதத்து க்கு முன்பாகச் செயற்கைகோள் உதவியுடன் ஜி.பி.எஸ் கருவியைப் பயன்படுத்தி 

சாமித்தோப்பு உப்பளம் பகுதியில் 800 ஏக்கர் நிலம் ஆய்வு செய்யும் பணி நடந்தது. 

அந்த ஆய்வறிக்கை மத்திய அரசின் விமானத் துறையிடம் வழங்கப் பட்டுள்ளது.

இதை யடுத்து, மத்திய விமானத் துறை துணைப் பொது மேலாளர்கள் சுதே சர்மா, குப்தா, அனுராக் மிஸ்ரா 

மற்றும் உதவி துணைப் பொது மேலாளர் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய நான்கு பேர் குழு விமான நிலையம் அமைய உள்ள இடத்தை இன்று ஆய்வு செய்தனர். 

விமானம் தரை இறங்கும் போது காற்றின் வேகம் எப்படி இருக்கும், காற்று எந்தத் திசையில் வீசும் என்பது குறித்து ஆய்வு செய்து ஓடுதளம் அமைக்கப் படும் எனவும் 

இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகள், கல்லூரி, பள்ளிகள் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுக்கப் பட்டு வருவ தாகவும் 

விரைவில் விமான நிலையப் பணிகள் தொடங்கும் எனவும் நாடாளு மன்ற உறுப்பினர் விஜயகுமார் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings