விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் சொன்னது?

0
நேபாளத் தில் குறைந்தது 49 பேர் கொல்லப் பட்ட விமான விபத்தி லிருந்து தப்பி பிழைத்த வர்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் அந்த விமானம் கீழ் நோக்கி விழுந்த மோசமான தருணங்களை பற்றி கூறுகிறார்கள்.
விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் சொன்னது?
நேபாளத்தின் தலைநகரான காத்மண்டு விலுள்ள திரிபுவன் விமான நிலையத்தில் 71 பயணிகள் மற்றும் ஊழியர்களை கொண்ட விமானம் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கியது.

விமானம் விபத்திற் குள்ளான போது பெரும் சத்தம் கேட்ட தாகவும், விமானம் கடுமையாக குலுங்கிய போது 

உள்ளே யிருந்தவர் களின் அழுகுரலும், கூச்சலும் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறு கிறார்கள்.

விமானம் விபத்திற் குள்ளானதற் கான காரணம் இது வரை அறியப் படாத நிலையில், விசாரணை யானது தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

விமானத் தின் இடி பாடுகளி லிருந்து தரவு பதிவு கருவி மீட்கப் பட்டுள்ளது.கடந்த பல ஆண்டுகளில் நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான விமான விபத்தாக இது கருதப் படுகிறது.

நேபாளத் தில் முதல் முறையாக விமானம் அறிமுகப் படுத்தப் பட்ட 1949 ஆம் ஆண்டி லிருந்து இதுவரை 70க்கும் மேற்பட்ட விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகள் நடை பெற்றுள்ளது.

மோசமான வானிலை, போதிய அனுபவமற்ற பைலட்டுகள் மற்றும் பராமரிப் பின்மை ஆகியவற்றின் காரண மாகவே பெரும் பாலான விபத்துக்கள் நடை பெற்றுள்ளன.
அந்த விமானம் கீழ் நோக்கி விழுந்த மோசமான தருணங் களை பற்றி கூறு கிறார்கள்.
விமான த்தின் ஜன்னலை உடைத்து தப்பித்த ஒரு பயணி, தரை யிறங்கும் சமயத்தில் விபத்துக் குள்ளான விமானம் கடுமையான அதிர்வினை ஏற்படுத்தி யதாக தெரிவித்தார்.

'ஒரு உரத்த சத்தம்'

பாம்பார்டியர் டாஸ் 8 கியூ400 என்ற 17 வருட பழைய விமானமான அது வங்கதேச தலை நகரான டாக்கா விலிருந்து, காத்மண்டு நகருக்கு யூஎஸ்-பங்களா என்ற வங்கதேச நிறுவனத் தால் இயக்கப் பட்டது.

விபத்தில் சிக்கி தப்பித்த வர்களில் ஒருவரான கேஷவ் பாண்டே என்பவர், "நான் அவசர வழி கதவுக்கு அருகில் அமர்ந் திருந்தேன். 

பாது காவலர்கள் வந்து கதவை திறந்து வெளியே அழைத்து சென்று விட்டனர். அதன் பிறகு நடந்தது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது, நான் மயக்க நிலைக்கு சென்று விட்டேன்."

"விமானத் தின் வெளிப் புறத்தில் பெரியளவில் தீப்பிடித்த தால், எங்களது இருக்கை யின் வழியாக புகை வெளிப் பட்டது. 
அதைத் தொடர்ந்து வெடிப்பும் ஏற்பட்டது. அதன் பிறகு தீ உடனடி யாக அணைக்கப் பட்டவுடன் நாங்கள் மீட்கப் பட்டோம்" 

என்று விபத்தில் சிக்கிய மற்றோடு பயணியான வங்க தேசத்தை சேர்ந்த 29 வயது ஆசிரியரான ஷெரின் அஹ்மத் பிபிசியிடம் கூறினார்.

விபத்தி லிருந்து தப்பிய 22 பேரில் 11 பேர் நேபாள த்தையும், 11 பேர் வங்க தேசத்தையும் சேர்ந்தவர் களாவர்.

விமானம் விபத்துக் குள்ளானதற் கான காரணம் குறித்து இது வரை தெளிவான விவரம் அறியப்பட வில்லை. 

விமான நிறுவனம் விமான போக்கு வரத்து கட்டுப் பாட்டையும், விமான நிலையமோ விமானம் தவறான திசையில் தரையிறங்கி யதாகவும் குற்றஞ் சாட்டுகின்றன.

விமான ஓடு தளத்தின் தெற்கு பகுதியில் இருந்து தரை யிறங்க இந்த விமானம் அனுமதிக்கப் பட்டிருந்தது. 

ஆனால், இந்த விமானம் வடக்கு பகுதியில் இருந்து தரை யிறங்கியது'' என்று நேபாளத் தின் சிவில் விமான போக்கு வரத்து அமைப்பின் 
பொது மேலாளர் சஞ்சீவ் கௌதம் தெரிவித்த தாக காத்மாண்டு போஸ்ட் பத்திரிக்கை கூறி யுள்ளது.

''அசாதாரண முறையில் நடந்த இந்த விமான தரை யிறக்கம் குறித்த காரணங் களை இன்னமும் நாங்கள் முழுவதுமாக அறிந்து கொள்ள வில்லை'' என்று அவர் மேலும் கூறினார்.

ஆபத்தான விமான நிலையம்

இதற்கு முன்னர் நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்துக் களுக்கு தெளிவற்ற தகவல் தொடர்புகள் காரணமாக இருந்திருக்கின்றன என்று விமான போக்குவரத்து வல்லுனரான கிரெக் வால்ட்ரான் பிபிசியிடம் கூறினார். 

உலகளவில் விமான போக்கு வரத்தில் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக நேபாளம் பார்க்கப் படுகிறது. 
அந்த விமானம் கீழ் நோக்கி விழுந்த மோசமான தருணங் களை பற்றி கூறு கிறார்கள்.
மலைப் பாங்கான நிலப்பரப்பு மட்டு மல்லாது, அங்கு அடிக்கடி மாறும் வானிலை யும் விபத்துக் களுக்கு காரண மாக பார்க்கப் படுகிறது.

"விமானம் பறந்து கொண்டிருந்த பரப்புக்கு அருகில் அப்போது இடி மற்றும் மின்னல் ஏற்பட்ட தாக வளி மண்டல வியல் தரவுகள் தெரிவிக் கிறது" என்று வால்ட்ரான் கூறுகிறார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இன்டர் நேஷனல் ஏர் லைன்ஸின் விமானம் விபத்துக் குள்ளானதில் 167 பேர் பலியானதே இதற்கு முன்பு நடை பெற்ற மோசமான விபத்தாக கருதப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings