காண்டாமிருகத்தின் அழிவு, மனிதகுலத்தின் அழிவு... ஆய்வாளர்கள் !

0
உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டா மிருகம் நேற்று (செவ்வாய்க் கிழமை) இறந்துள்ளது. 
காண்டாமிருகத்தின் அழிவு, மனிதகுலத்தின் அழிவு... ஆய்வாளர்கள் !
ஒரு மாத காலமாக உடல் உபாதையை அனுபவித்த இந்த காண்டா மிருகத்திற்கு மருத்து வர்கள் மருந்தளித்து மரணிக்க வைத்தனர். 

அதன் மறைவு குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இனி மீண்டும் இத்தகைய காண்டா மிருகம் பிறக்க, செயற்கை கருதரிப்பு வாய்ப்பே உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆண்டு தோறும் மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் கொண்டாடப் படுகிறது. 

இந்நிலையில், இந்த காண்டா மிருகத்தின் மரணம் என்பது, காடு மற்றும் சூழல் குறித்து மனிதர்கள் எந்த அளவிற்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவூட்டும் விஷயமாக உள்ளது. 

உலகில் உள்ள உயிரின ங்களுள், 30 முதல் 50 சதவீதம் வரை, 2050 ஆம் ஆண்டுக்குள் அழியலாம் என்று கண்டறியப் பட்டுள்ளது.
இது இயல்பான ஒன்றல்ல. மனிதனின் செயல்பாடுகள் தான் இந்த அழிவுக்கு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

அழியும் நிலையில் விலங்குகள் இப்போது இந்த பூவுலகில் 5,000 கிழக்கத்திய கொரிலாக்கள் தான் உள்ளன. 

போரினாலும், வேட்டை யினாலும் இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டுக்குள் 350 ஆக குறையலாம். ஆனால், அதே நேரம் விலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கை யும் அதிகரித் துள்ளது. 

அழிந்து வரும் வனவிலங்கு என்று பட்டியலிடப் பட்டு இருந்த கருப்பு காண்டா மிருகத்தின் எண்ணிக்கை அதிகரி த்துள்ளது.

அமுர் சிறுத்தையின் எண்ணிக்கை 2007 ஆம் ஆண்டு 30 என்ற எண்ணிக்கை யில் இருந்தது. ஆனால், இன்று அதன் எண்ணிக்கை 57 ஆக உயர்ந் துள்ளது. 
இண்ட்ரி லெமூர் (Indri Lemur) என்ற விலங்கின் எண்ணிக்கை இப்போது பத்தாயிர த்திற்கும் குறைவு தான். ஆனால், இது 2050 ஆம் ஆண்டுக்குள் இரண்டா யிரமாக குறையலாம். 

இதற்கு காரணம் அதன் வாழ்விட அழிப்பும், வேட்டையும் தான். இவை மட்டும் அல்ல 30 - 50 சதவீத உயிரினங்கள் இப்புவியில் அழியும் நிலையில் உள்ளன. 

அருகி வரும் 5000 விலங்குகள் சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம், அருகி வரும் நிலையில் இருக்கும் உயிரினங்கள் என 

5000 உயிரினங் களை பட்டியலிட் டுள்ளன. அவற்றில் சீனாவில் உள்ள யுனான பாக்ஸ் ஆமை, சுமத்திரா காண்டாமிருகம், 

ஆரஞ்சு நிறத்தில் வயிற்றுப் பகுதி கொண்ட கிளி ஆகிய வையும் அடங்கும். குறிப்பாக சுமத்திரா காண்டமிருகம் நூற்றுக்கும் குறைவாக தான் உள்ளதாக கூறுகிறது 

சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம். வேட்டை ஆடப்படுவது தான் இந்த எண்ணிக்கை குறை வதற்கு முக்கிய மான காரணம் என்று கூறுகிறது இந்த சங்கம். 

ஏன் நாம் கவலை கொள்ள வேண்டும்? ஏதோ ஒரு விலங்கு அழிந்தால் நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்? 
ஒரு மாத காலமாக உடல் உபாதையை அனுபவித்த இந்த காண்டா மிருகத்திற்கு மருத்து வர்கள் மருந்தளித்து மரணிக்க வைத்தனர்.
என்பது நம் கேள்வியாக இருந்தால், ஏதோ ஒரு விலங்கின் அழிவு மனித அழிவுக்கு வழி வகுக்கலாம் என்கிறார்கள் சூழலிய லாளர்கள். 

சூழலியல் ஆய்வாளர் சு. நாராயணி, இது ஓர் உயிர் வலை பின்னல், இந்த பின்னலில் ஒரு கண்ணி அறுப்பட்டால், இன்னொன்று க்கு நிச்சயம் ஆபத்தும் வரும், அழிவும் வரும். 

உணவு சங்கிலியில் மனிதன் மேலே இருக்கிறான். மேலே இருப்பதால், அதிக ஆபத்தும் பொறுப்பும் ஒருங்கே மனிதனுக்கு தான் இருக்கிறது." என்கிறார். 

அவர், இதை எளிமை யாக புரிந்து கொள்ள வேண்டுமானால், பாசியை சொல்ல லாம். மனிதன் பாசியை நேரடியாக உண்ப தில்லை. ஆனால் பாசியை உண்ணும் மீனை மனிதன் உண்கிறான். 

பாசியில் விஷம் ஏறியது என்றால், அது உண்ணும் மீனை முதலில் பாதிக்கும். பின், மீனை உண்ணும் மனிதனை பாதிக்கும். 

அது போலதான் ஓர் உயிரின த்தின் அழிவும்." என்கிறார். ஓர் உயிரின த்தின் அழிவு, வாழ்விட அழிவிற்கும் வழி வகுக்கும் என்கிறார் நாராயணி. 

குறிப்பாக புலி, காண்டாமிருகம் போன்ற குடை இனம் (Umbrella Species) அழிந்தால், அவை ஆளுகை செலுத்தும், அதன் வாழ் விடமும் நாசமாகும் என்கிறார் நாராயணி. 
டூடூ பறவையின் அழிவு இதை வழிமொழியும் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், டூடூ பறவையை யும், கல்வாரியா மரத்தையும் உதாரண மாக சொல்கிறார். 

நக்கீரன், "மொரீஷிய ஸில் இருந்த கல்வாரியா எனும் மரத்தின் பழங்கள் தான் டூடூவின் விருப்ப உணவாக இருந்தது. 

டூடூவின் கழிவி லிருந்து வெளியேறும் விதைதான் முளைக்கும் ஆற்றல் மிக்கதாக இருக்கும். அங்கு டூடூ பறவை அழிந்ததால், கல்வாரியா மரமும் அழிந்து போய் விட்டது. 

இப்படி எந்த கண்ணி எதனுடன் தொடர் புடையது என்று தெரியாது. எதன் அழிவும் மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கலாம்." என்கிறார்.

ஏதோ ஒரு விலங்கு அழிகிறது என்று மெளனியாக இருந்து விடக் கூடாது. அழிந்து வரும் உயிரின த்தை காப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்கிறார்கள் ஆய் வாளர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings