கத்தியால் குத்தப்பட்ட அஸ்வினி... நியாயப்படுத்தும் சினிமா !

0
கத்தியால் குத்தப்பட்ட அஸ்வினிக்கு எத்தனை கனவுகளி ருந்தனவோ? கல்லூரிக்குச் சென்ற மகள் கத்தியால் குத்திக் கொல்லப் பட்டாள் என்றால் அந்தப் பெண்ணைப் பெற்ற வர்களின் கதியை நினைத்துப் பாருங்கள்.
கத்தியால் குத்தப்பட்ட அஸ்வினி... நியாயப்படுத்தும் சினிமா !
அவளுடனே அருகமர்ந்து படிக்க வாய்த்த பிற மாணவிகளின் மன நிலையை யோசித்துப் பாருங்கள். சென்னையில் இப்படிப்பட்ட பயங்கரங்கள் இன்று தொடர் கதையாகி வருகின்றன.

கொலையின் பின்னணி...

மதுரவாயலைச் சேந்த மாணவி அஸ்வினிக்கு அழகேசன் என்ற இளைஞரால் முன்பே தொந்திரவு இருந்திருக் கிறது. அழகேசன் கடந்த மாதம் காதல் எனும் பெயரில் மாணவி அஸ்வினிக்கு கட்டாயத் தாலி கட்ட முயன்றி ருக்கிறார். 
அது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்திருக்கிறார். அஸ்வினியின் புகாரின் அடிப்படையில் அழகேசன் காவல் நிலையத் துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப் பட்டிருக் கிறார். 

இதனால் கோப மடைந்த அழகேசன் இன்று மாணவி அஸ்வினி கல்லூரி முடிந்து வழக்கம் போல கல்லூரியை விட்டு வெளியில் வருகையில் வாசலில் வைத்தே கத்தியால் குத்திக் கொன்றி ருக்கிறார். 

மாணவி அஸ்வினி கத்தியால் குத்தப் பட்டதும் சம்பவ இடத்தி லிருந்தோர் அவரை அவசர கதியில் அருகிலிருந்த மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை யளிக்க முயன்றிருக் கிறார்கள். 

ஆனால், அதிகப் படியான ரத்தம் வெளியேறியதில் மாணவி அஸ்வினி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்திருக் கின்றனர். மாணவியை கத்தியால் குத்தி விட்டு அழகேசனும் தற்கொலைக்கு முயன்றிருக் கிறார். 
ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திர முற்று அந்த இளைஞனை அடித்துத் துவைத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். 
பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் ரெசிபி !
தற்போது பிடி பட்டுள்ள அந்த இளைஞன் அருகிலுள்ள இஎஸ் ஐ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல்.

கொலை செய்யப் பட்ட அஸ்வினி, அழகேசனின் ஒரு தலைக் காதல் தொல்லையைப் பொறுக்க இயலாமல் மதுர வாயலில் இருந்து ஜாபர்கான் பேட்டையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். 

கடந்த சில நாட்களாக அவர் அங்கிருந்து தான் கல்லூரிக்குச் சென்று வந்திருக்கிறார். கொலையாளி அழகேசன் பட்டப்பகலில் மக்கள் நெருக்கடி மிகுந்த கே.கே நகர் பகுதியில் மாணவி ஒருவர், 

இளைஞன் ஒருவனால் குத்திக் கொல்லப் பட்ட்அ இச்சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே காதல் என்ற பெயரில் தொடர்ந்து இளம் பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் நடத்தப்பட்டு வரும் வன்முறைகள் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக் கின்றன.

தமிழகத்தில் காதலின் பெயரால் இப்படி வன்முறைகள் நிகழ்த்த படுவது முதல் முறையல்ல.
தொடரும் ஒரு தலைக் காதல் கொலைகள்...

2016 ஆம் ஆண்டில் ஜூன் 24 ஆம் தேதி அன்று நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட இளம்பெண் ஸ்வாதி கொலைக்கு காரண மாகவும் இதே ஒருதலைக் காதல் விவகாரம் தான் பேசப்பட்டது. 
கிறுகிறுப்பு, தலைச் சுற்றல் ஏற்படுவது ஏன்?
தனது உருவத்தைக் கேலி செய்து காதலை ஏற்க மறுத்ததால் ராம்குமார் எனும் இளைஞன், ஸ்வாதியை ரயில் நிலையத்தில் வைத்து அரிவாளால் வெட்டிக் கொன்றான் 

என்பதே கடைசி வரை உண்மை என காவல்துறை சாதித்தது. முடிவில் ராம்குமாரும் சிறையில் வைத்து தற்கொலை செய்து கொள்ள அந்த வழக்கு அப்படியே முடிந்தது. 

இன்று வரை ஸ்வாதி கொலை வழக்கு பல்வேறு மர்ம முடிச்சு களுடனும் விடை தெரியா சந்தேகங் களுடனும் நீடித்தாலும் கொலைக்குக் காரணம் ஒருதலைக் காதல் என்று தான் காவல் துறையால் கூறப்பட்டுள்ளது.

ஸ்வாதி கொலையைத் தொடர்ந்து ஜூன் 27 ஆம் தேதி சேலத்தைச் சேர்ந்த வினுப்ரியா எனும் மாணவி தற்கொலை செய்து கொண்டார். 

வினுப்ரியா, தனது காதலை ஏற்க மறுத்ததால் சுரேஷ் எனும் மாணவன் வினுப்ரியா வின் புகைப் படத்தை மார்ஃபிங் செய்து முக நூலில் பதிவு செய்ய 

அதைக் கண்டு மனமுடைந்த வினுப்ரியா தற்கொலை செய்து கொண்ட தாகச் செய்தி. இந்தக் கொலை யிலும் ‘ஒரு தலைக் காதல் தான் பிரதானம்.
நீர் கட்டி (Cyst) என்றால் என்ன?
அடுத்து, விழுப்பு ரத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி நவீனாவை, தன்னைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி செந்தில் என்ற இளைஞன் வற்புறுத்த, மாணவி நவீனா அதற்கு ஒத்துழைக் காததால் நவீனா மீதும், 

தன் மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டான் அந்த இளைஞன். இதனால் ஒரு பாவமும் அறியாத அந்தத் தளிர் காதலின் பெயரால் தனது விருப்ப மின்றியே ஒரு கொடூரத்துக்குப் பலியானது.

அதே போல... தொடரும் வெறிச்செயலாக கரூர் மாணவி சோனாலியை, உடன் படித்த மாணவன், தனது ஒரு தலைக் காதலை அந்த மாணவி 

ஏற்றுக் கொள்ளாததால் மாணவியைக் கல்லூரி வகுப்பறையில் வைத்தே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதோடு முடிய வில்லை இத்தகைய கொடூரங்கள், தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா என்பவருக்கு மறு நாள் திருமணம் என்ற நிலையில், 

அவரை சர்ச் வளாகத்தில் வைத்தே சீகன் கோமஸ் என்பவன் வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடினான். இதன் பின்னணி யும் ஒருதலைக் காதலே!
மிருகங்களுடன் பாலியல் - இது ஒரு விதமான மனநோயா?
திருச்சி மோனிஷா, கோவையில் தன்யா, சென்னையில் சோனியா என்று தொடர்ந்து இளம் பெண்கள் கத்தியால் குத்தப் பட்டும், 

அரிவாளால் வெட்டப்பட்டும், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டும் கொலை செய்யப் பட்டதன் பின் புலமாகக் கூறப்பட்டது. 

அதே ஒருதலைக் காதல் விவகாரம் தான்.இத்தனை கொடூரங்களையும் தொடர்ந்து தொலைக் காட்சி செய்திகளின் வாயிலாக பார்த்துக் கொண்டும், 

அதைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருக்கும் பொது மக்களின் தீர்க்க முடியாத பிரச்னைகளில் ஒன்றாக இப்போது பிள்ளை வளர்ப்பும் மாறி விட்டிருக்கிறது. 
ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் சிறுவர் களையும், சிறுமி களையும், இளம் பெண்களையும், இளைஞர் களையும் எப்படி கையாள்வது என்றே புரியாமல் தவிக்கி றார்கள் பெரும் பாலான பெற்றோர்கள். 

முடிவெடுக்கத் தெரியாத வயதில் பிள்ளைகள் செய்யும் தவறு களை பக்குவமாக கையாண்டு எவ்வித சேதமும் இன்று அவர்களை அந்தச் சிக்கலில் இருந்து மீட்பது எப்படி என்ற கவலை இன்று 100 ல் 80 பெற்றோருக்கு உண்டு.
வக்கிரத்தின் உச்சம் - இந்த இளைஞர் செஞ்ச அருவருப்பான வேலை !
நிலைமை அப்படி இருக்க, இன்றைய பெற்றோர்களை வதைக்கும் காரணிகளில் மேலும் ஒன்றாக இப்போது ஒருதலைக் காதலும் அதனால் விஸ்வரூப மெடுக்கும் கொடூரக் கொலைகளும் கூட இணைந்து கொண்டமை துரதிருஷ்ட வசமானவை.

இதற்கொரு முடிவு கட்ட வேண்டுமெனில் இளைஞர்களும், இளம் பெண்களும் இருக்கும் வீடுகளில் பெற்றோருக்கும், 

பிள்ளை களுக்குமான உரை யாடல்களில் தொய்வு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்துப் பெற்றோரின் கடமை. 

அது மட்டுமல்ல வளர்ந்த பிள்ளைகள் தானே, இனி அவர்களது விஷயங் களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று மிகுந்த தன்னம் பிக்கையோடு பிள்ளைகளை 

கட்டுப்பாடற்ற அதிகப்படி சுதந்திரத்துக்கோ அல்லது தலைமுறை இடைவெளியின் காரணமாக நிகழும் தன்னியல்பான தூரத்திற்கோ பழக்கி விடாதீர்கள். 

அம்மாதிரி யான சூழல்களில் தான் மேற்கண்ட வெறிச்செயல்கள் நிகழ் அதிக சாத்தியங்கள் இருக்கின்றன. 

எல்லா வற்றுக்கும் மேலாக, இந்த ஒரு தலைக் காதல் விவகாரத்தில் கொலை போன்ற கொடூரங்கள் நிகழ நமது சினி மாக்களும் முக்கிய காரணங் களாகின்றன என்பதை மறுக்க முடியாது. 
கர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்ய கூடாது? பாதுகாப்பு டிப்ஸ் !
ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆணின் மீது விருப்ப மில்லை, காதல் இல்லை யென்றால் அந்தச் சூழலை எப்படி கெளரமாக அணுக வேண்டும் என இன்றைய இளைஞர் களுக்கு கற்றுத் தரும் சினிமாக் களை உருவாக் குங்கள். 
முகத்துக்கு நேராக ஒரு பெண் நோ என்று சொன்னால் அடுத்து அவளை வெட்டச் சொல்வதும், குத்தச் சொல்வதும், பெட்ரோல் ஊற்று எரிக்கச் சொல்வது மாக சினிமாக்கள் எடுக்கப் பட்டால், 

சினிமாவை சினிமாவாகப் பார்க்கத் தெரியாத இந்தக் கால இளைஞர், இளம் பெண்களை நாம் குற்றம் சொல்ல வாய்ப் பில்லை.

தயவு செய்து காதலின் பேரால் இனியொரு கொடூரக் கொலை நிகழ்த்தப் பட வேண்டாம்.

அதற்கான பொறுப் புணர்வை, புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை பெற்றோர், ஆசிரியர், ஊடகத் தினர், சினிமா படைப்பாளிகள் என நம் அனைவரு க்கும் உண்டு!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings