இப்போ தெல்லாம் வாரம் முடிந்தால் ரிலாக்ஸ் செய்ய பெரும் பாலும் பலர் தியேட்டரையே தேர்வு செய்கின் றார்கள். 
4k தியேட்டர் என்றால் என்ன?
பாகுபலி மாதிரியான ஒரு பெரிய படம் கண்டிப்பாக ஊருக்கு இரண்டு திரையரங் கிலாவது ரிலீஸ் ஆகும். 

சென்னையைப் பற்றி சொல்லவே வேண்டிய தில்லை. அதனால் ரசிகனுக்கு என்ன படம் பார்ப்பது என்பதில் இருக்கும் குழப்பதை விட எங்கு பார்ப்பது என்பதில்தான் குழப்பம் அதிகமாக உள்ளது. 
குடும்பத்துடன் செல்ப வர்கள் நல்ல தொழில் நுட்பத்தை விட நல்ல சூழலையே எதிர் பார்கின்றனர். 

மற்றவர்கள் கொடுத்த பணத்திற் கான தரத்தையே எதிர் பார்கிறார்கள். ஆனால் அந்தத் தரம், தொழில் நுட்பம் பற்றி அறிந்துகொள்ள பெரிதாக யாரும் முனை வதில்லை. 

முக்கால்வாசி பேருக்கு ’காரசிங்கம் ஏ/சி’ காமெடி போல் தியேட்டர் பெயருக்கு பின் எதாவது அடைமொழி இருந்தால் போதும். 

அட்மாஸ், ஆரோ 3டி, 4k இன்னும் ஏராளமான அடை மொழிகள் தியேட்டர் களுக்கு உண்டு. அவை என்ன?

டால்பி அட்மாஸ்

மாநகர தியேட்டர்கள் பலவற்றுக்கு பின் டால்பி அட்மாஸ் என்ற அடை மொழியை பார்க்கலாம். 

சமீப காலமாக, சென்னை என்று இல்லாமல் மதுரை, ஆலங்குளம் வரை அட்மாஸ் ஊடுருவி வந்து விட்டது. 

டால்பி அட்மாஸ்
தொடக்க காலத்தில் படங்களு க்கு ஒலி ‘மோனோ’ (mono) தொழில் நுட்பத்தில் தான் வெளி வந்தது. 

அதாவது ஒரே சவுண்ட் சேனல் தான் பல்வேறு ஸ்பீக்கர் களுக்கு செல்லும். பின்பு 'ஸ்டிரியோ' (stereo) தொழில் நுட்பம் வந்தது. இதில் இடது, வலது என இரு சேனல்கள் இருந்தன. 

வலதுபுற ஸ்பீக்கர் களுக்கு வலது சேனல் ஒலியும் இடதுபுற ஸ்பீக்கர் களுக்கு இடது சேனல் ஒலியும் அனுப்பப் பட்டது. 
நெல்லிக்காய் பருப்பு ரசம் செய்வது !
பின்பு Surround தொழில் நுட்பங்கள் வர ஆரம்பித்தன. டிடிஎஸ் (DTS), டால்பி டிஜிட்டல், ஆர்டிஎக்ஸ் (RDX) போன்றவை சில உதாரணங்கள். 

இதை அறிமுகப் படுத்தியது டிடிஎஸ் (DTS) தான். மேலே கூறப் பட்டிருக்கும் மற்ற சரவுண்ட் தொழில் நுட்பங்கள் இதற்குப் போட்டி யாக அரம்பிக்கப் பட்டதே. 

இதில் வலது, இடது சேனல்கள் சேர்த்து சரவுண்ட் சேனல்கள் இருக்கும். 

இது இயற்கை சத்தங்கள், வாகன சத்தங்கள் போன்று காட்சியில் நடக்கும் பல சரவுண்ட் ஒலிகளை கொண்டு இருக்கும். 

இந்த சேனல்களில் இருந்து ஆடியோ தியேட்டரின் பின் பக்கம் இருக்கும் சரவுண்ட் ஸ்பீக்கர் களுக்கு லெப்ட், ரைட் என அனுப்பபடும். 

அது நமக்கு காட்சி நடக்கும் இடத்தில் இருக்கும் உணர்வை தர முயற்சிக்கும். 
ரைட், லெப்ட், சென்டர், சரவுண்ட் லெப்ட், சரவுண்ட் ரைட், வுஃபர் என்று 5+1 சேனல்கள் இருப்பதால்தான் இதை 5.1 என்று கூறுவர்.

இதில் மிகவும் அட்வான்ஸ் அட்மாஸ் தொழில் நுட்பம். கிட்டத் தட்ட 64 சேனல்களை கொண்டது அட்மாஸ். இவை அனைத் திலும் வேறு வேறு ஒலி இருக்கும். 

இவை தலைக்கு மேல் இருக்கும் ஸ்பீக்கர்கள், தரையில் இருக்கும் ஸ்பீக்கர்கள் என 

தியேட்டரின் அனைத்து பகுதிகளில் இருக்கும் ஸ்பீக்கர் களுக்கும் அந்த இடத்திற் கான பிரத்யேக சேனல் ஒலியை அனுப்பும். 
வார்ம் மஷ்ரூம் சாலட் செய்வது !
இதனால் ஹெலிகாப்டர் பார்க்கும் சீன் என்றால் ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் தலைக்கு 

மேலும் தண்ணீர் போகும் சத்தம் காலுக்கு கீழ் கேட்கும் உணர்வை தரவல்லது அட்மாஸ். அட்மாஸ்பியர் (atmosphere) என்பதே அட்மாஸ் பெயர்க் காரணம்.

auro 3d

இது அட்மாஸ்க்கு முந்தையே தொழில் நுட்பம் என்று கூறலாம். இதில் 11+1 சேனல்கள் உண்டு (இப்போது கூடுதலாகவும் வருவதுண்டு). 

இவை சரவுண்ட் மட்டும் அல்லாமல் காதுக்கு மேல் கேட்கும் ஒலியையும், கீழ் கேட்கும் ஒலியையும் வித்யாசப் படுத்த வல்லது. 
auro 3d
இதை ஆடியோவில் 3டி என்றே கூறலாம். அதனால் தான் ஆரோ 3டி. தமிழில் விஸ்வரூபம் படம் மூலம் அறிமுக மானது. 

வீடியோவில் 3டி போன்று ஆடியோவில் ஆரோ 3டி என்றால் ஆடியோவில் விர்சுவல் ரியாலிட்டி டால்பி அட்மாஸ் என்று சொல்லலாம்.

7.1

இது 5.1க்கு ஒருபடி மேலே சென்று 2 சேனல்கள் கூடுதலாக சேர்த்து, மற்றும் ஒரு கோணத்தை ஆடியோவு க்குச் சேர்த்தது. 
சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ் ரெசிபி !
இது பீட்சா படம் மூலம் தமிழுக்கு வந்தது. ஆரோ 3டிக்கு முந்தைய தொழில் நுட்பம் இது.

இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை யும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 
7.1
தியேட்டர் களில் இந்த தொழில் நுட்பங்கள் இருப்பது மட்டும் நல்ல அனுபவத்தை தர போதாது. 

படங்களும் இந்த தொழில் நுட்பத்தில் சரியாக மிக்ஸ் செய்யப் பட்டிருக்க வேண்டும். 
கை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் !
இன்று பெரும்பான்மை படங்கள் அட்மாஸில் வர ஆரம்பித்து விட்டன. 

ஆனால் இந்த தொழில் நுட்பத்தின் முழு திறனையும் அவை பயன்படுத்து கின்றனவா என்பது கேள்விக்குறி தான். 

கடைசி நேரத்தில் அவசர அவசரமாக மிக்ஸ் செய்வதால் முக்கால்வாசி படங்கள் பெயரளவில் தான் இந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்து கின்றன.

4k, 2k

இவை ஒளி சமந்தப் பட்டது. இது நாம் சாதாரண மாக கூறும் HD மாதிரியான ரெசொல்யூசன் தான். 1080p யை விட 4 மடங்கு பெரியது தான் 4k (4096 x 2160). 

4k, 2k
இப்போது எல்லாப் படங்களும் 4kவில் தான் வெளியா கின்றன. 2k ரெசொல்யூசன் 1080pயை விட இரண்டு மடங்கு என்று சொல்ல லாம். 

தமிழகத்தில் பாதிக்கும் மேல் தியேட்டர்கள் 2k ப்ரொஜெக்டர் தான் பயன்படுத்து கின்றனர்.
பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் ரெசிபி !
டூயல் ப்ரொஜெக்ஷன் (Dual projection)

இதை சில தியேட்டர்களில் குறிப்பிடப் பட்டிருப்பதை பார்க்க லாம். இரண்டு ப்ரொஜெக்டர்கள் கொண்டு படம் ஒளிபரப் படுவதே இத்தொழில் நுட்பம். 

இது வீடியோவின் டெப்த்தை அதிகரிக்கும். அதனால் வீடியோ மிகவும் தெளிவாக இருக்கும்.

டூயல் ப்ரொஜெக்ஷன் - Dual projection
கியூப் (Qube), பிஎக்ஸ்டி (PXD), UFO போன்ற அடை மொழிகள் தியேட்டரில் படங்கள் எந்த டிஜிட்டல் டிஸ்டரிபூஷன் நடைமுறையில் ஒளிபரப்பு கின்றன என குறிப்பிடும்.
கிறுகிறுப்பு, தலைச் சுற்றல் ஏற்படுவது ஏன்?
இப்படி தொழில் நுட்பங்கள் பல இருக்க உங்கள் ஊர் தியேட்டரில் என்ன தொழில் நுட்பம் இருக்கிறது என்பதை தெளிவாக அறிந்து கொண்டு படங்களை ரசிக்கலாம். 

அது நமது அனுபவத்தை கூடுதல் சுவாரஸ்யம் ஆக்கும்.