நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதம் குறைப்பு !

0
இன்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வருமானமுள்ள பெரும் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி 25 சதவிகித மாக நீடிக்கிறது.
நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதம் குறைப்பு!
முந்தைய பட்ஜெட்டிலும் இதே அளவு வரியே விதிக்கப் பட்டிருந்தது. நடப்பு நிதியாண் டிலும் இது தொடரும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

“ஆண்டுக்கு ரூ.250 கோடிக்குள் வருமானம் பெற்று அதற்கான வரிசெலுத்தும் 7 லட்சம் நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன. 

அவற்றில் 99 சதவிகித நிறுவனங்கள் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங் களாகும். வரி குறைப்பு இந்நிறுவனங் களுக்கு பயனளிக்கும். 

மீதமுள்ள 7,000 பெரு நிறுவனங் களும் 30 சதவிகித வரி செலுத்த வேண்டும். பெரு நிறுவன வரி குறைக்கப் பட்டு இருப்பதால் அரசுக்கு கூடுதலாக ரூ.7,000 கோடி செலவாகும்” என்று அருண் ஜெட்லி தெரிவித்தார்.
வரிக்குறைப்பு அனைத்துத் தரப்புக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. பி.டபிள்யூ.சி இந்தியா நிறுவன பங்குதாரர் மற்றும் தலைவர் அபிஷேக் கோயங்கா இது சம்பந்தமாக அதிருப்தி தெரிவித் துள்ளார். 

அனைத்துத் தரப்புக்கும் வரிக்குறைப்பு இருந்திருக்க வேண்டும். இதுபோல் குறிப்பிட்ட சில நிறுவனங் களுக்கு குறைப்பது பலன் தராது என்று அவர் கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings