போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்... முதல்வர் !

0
மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கி றார்கள் என்பதை உணர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளும்,
போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்... முதல்வர் !
போக்கு வரத்து ஊழியர்களும், உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டு க்கொள்வதாக தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

போக்குவரத்து துறை ஊழியர் களின் போராட்டம் குறித்து சட்டப் பேரவையில் இன்று (செவ்வாய்க் கிழமை) பேசிய முதல்வர் பழனிசாமி, "எதிர்க்கட்சி துணைத் தலைவர் அவர்கள் அனுபவம் மிக்கவர். 

ஆகவே எப்படி எப்படியோ பேசி ஒரு தவறான கருத்தை இங்கே பதிய வைத்திருக்கிறார். என்ன வென்றால், முதலமைச்சருக்கு ஆர்வம் இல்லையா என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார். 

அது தவறு. முதலமைச்சர் ஏன் முன்வரவில்லை என்ற ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். ஏற்கெனவே நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். 

ஒவ்வொரு முறையும்போக்கு வரத்துத் துறை அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்து பேசிய போது, என்னுடன் பேசி விட்டு சென்று தான் எங்களுடைய கருத்தின் அடிப்படையிலே தான் அங்கே பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அதாவது, முதலமைச்சர் சொல்லித்தான் அவர் அந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 2.44 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற உத்தர வாதத்தை தந்தார். 

ஆகவே, முதலமைச்சர் பேச்சு வார்த்தை நடத்த வில்லை என்று சொல்வது தவறானது.

முதலமைச்சர் என்ற முறையில் ஊழியர்களை மதிக்கக் கூடியவன், உழைப்பவர் களை மதிக்கக் கூடியவன், ஆகவே தான் 11 முறை போக்கு வரத்துத் துறை அமைச்சரை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்து பேசி முடிவு எடுத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல, ஒரு சுமுகமான நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பம். அதைத் தான் நாங்களும் எங்கள் தரப்பில் இருந்து தெரிவித்தி ருக்கிறோம். 

ஆகவே, எதிர்க்கட்சி தலைவர் அவர்களும், துணைத் தலைவரும் இதை நன்கு ஆலோசனை செய்து, இருக்கின்ற நிதி நிலைமை, போக்கு வரத்து கழகத்தின் நிதிநிலைமை நன்றாக உங்களுக்கு தெரியும்.

ஊதியம் உயர்த்தி வழங்கப் பட்டுள்ளது. மேலும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது நியாய மல்ல. ஏனென்றால், தற்போது இருக்கின்ற நிலைமை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். 
உங்களுடைய ஆட்சி யிலேயே ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக்கு கொடுக்க வேண்டிய 922 கோடி ரூபாய் பாக்கி வைத்திரு க்கிறீர்கள். ஆகவே, அதனுடைய நிதிநிலைமை உங்களுக்கு நன்றாக தெரியும். 

ஆகவே, இதை யெல்லாம் உணர்ந்து தான் தற்போது இருக்கினற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நான் தற்போது 2.44 மடங்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்து அதை அறிவிக் கப்பட்டு, 

அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் என்னுடைய நிலைபாடு. ஆகவே, எதிர்க்கட்சி தலைவரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும், உறுப்பின ர்களும் உதவிகர மாக இருக்க வேண்டும்.

வேலை நிறுத்த த்திலே ஈடுபட்ட வர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். ஏனென்றால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களே தெரிவித்தி ருக்கிறார். 

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே இரண்டு முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்கு வரத்து ஊழியர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று ஆணை பிறப்பித் துள்ளார்.

அதை எல்லாம் மதித்து, இருக்கின்ற நிலைமை உணர்ந்து பொது மக்களுக்கு சேவை செய்யக் கூடிய நிறுவன மாக போக்கு வரத்து கழகம் இருக்கின்ற காரணத் தினாலே, 
எதிர்க் கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப் போல மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கி றார்கள் 

என்பதை எல்லாம் உணர்ந்து வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதி களுக்கு எடுத்துச் சொல்லி, பிரதிநிதி களும், 

அதோடு போக்குவரத்து ஊழியர் களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு முதல்வர் பேசினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings