எம்.பி.பி.எஸ் படித்தாலும் டாக்டர் இல்லை - மருத்துவ ஆணைய சட்டம் !

0
போலீஸ் காரர்கள் லஞ்சம் வாங்கு கிறார்கள் என்பதற் காக காவல் துறையையே கலைத்து விடும் அபத்தமான முடிவை யாராவது எடுப்பார் களா? ஆனால், மத்திய அரசு இப்படித் தான் செய்கிறது.

எம்.பி.பி.எஸ் படித்தாலும் டாக்டர் இல்லை - மருத்துவ ஆணைய சட்டம் !
இந்திய மருத்துவ கவுன் சிலைக் கலைத்து விட்டு, தன் நேரடி நிர்வாக த்தில் தேசிய மருத்துவ ஆணைய த்தை அமைக்க முயற்சி செய்கிறது மத்திய அரசு. 

இதற்கான மசோதாவை மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவை யில் கடந்த வாரம் தாக்கல் செய்தார். 

எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி, மருத்து வர்களும் வீதியில் இறங்கி எதிர்த்த தால், இப்போது இந்த மசோதா நாடாளு மன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

‘எச்சூழலிலும் இதை நிறை வேற்றுவதி லிருந்து பின்வாங்க மாட்டோம்’ என்று மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

இந்திய மருத்துவக் கவுன்சில் 1934-ம் ஆண்டு உருவாக்க ப்பட்டது. இதில், இந்தியா வின் அனைத்து மாநிலங் களையும் சேர்ந்த 120 மருத்துவர்கள் பிரதிநிதி களாக இருக்கி றார்கள். 

தன்னாட்சி அதிகாரத் தோடு செயல்படும் இந்தக் கவுன்சில், மருத்துவக் கல்லூரி களைக் கண் காணிப்பது, 

மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதுகாப்பது, மருத்துவக் கல்லூரி களில் இடங்களை நிர்ணயிப்பது, மருத்துவர் களுக்கான பதிவு, 

புதிய மருத்துவக் கல்லூரி களுக்கும் படிப்பு களுக்கும் அனுமதி வழங்குவது போன்ற பணிகளைக் கவனிக் கிறது.

2010-ல்இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேதன் தேசாய், பஞ்சாபில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தருவதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப் பட்டார். 
பல கோடி பேரை திரும்பி பார்க்க வைத்த பெண்கள் - நீங்களே பாருங்கள் !
அவரது வீடுகளில் நடத்தப் பட்ட சோதனை யில் 1,800 கோடி ரூபாய் பணமும் 1,500 கிலோ தங்கமும் சிக்கியதாக பரபரப்பாகப் பேசப்பட்டது. 

இதை யடுத்து, மருத்துவக் கவுன்சிலின் செயல் பாடுகளை முறைப் படுத்துவதற் கான ஆலோசனை களை வழங்க, டாக்டர் ரஞ்சித் ராய் சௌத்ரி தலைமை யில் ஒரு கமிட்டி அமைக்கப் பட்டது. 
அதன் பரிந்துரை களின் அடிப்படை யில், மருத்துவக் கவுன்சிலை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணைய த்தை உருவாக்க முடிவு செய்திரு க்கிறது மத்திய அரசு.

‘இந்திய மருத்துவக் கவுன்சில் ஊழல் நிறைந்த அமைப்பாக மாறி விட்டது. அது மருத்துவக் கல்லூ ரிகளைக் கண்காணித்து, 

மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தத் தவறி விட்டது’ என்று குற்றம் சாட்டியிருக் கிறது மத்திய அரசு. 

ஆனால், ‘புதிதாக ஓர் அமைப்பை உருவாக்கு வதன் நோக்கம், மாநிலங்களின் உரிமையைப் பறித்து, மையத்தில் குவிப்பது. 

அதன் மூலம், தங்கள் கொள்கைகளை மருத்துவக் கல்வியில் திணிப்பது, மருத்துவ த்தைத் தனியார் மயமாக்கி கார்ப்பரேட் கையில் தருவது தான்’ என்கிறார்கள் மருத்துவச் செயற் பாட்டாளர்கள்.

‘‘பி.ஜே.பி அரசு, வெளிப்படை யாக இந்து மதக் கொள்கையைக் கல்வியில் கலந்து வருகிறது. 

யோகாவை அப்படித் தான் மெல்ல மெல்ல கல்வி க்கூடங்களு க்குள் கொண்டு வந்தார்கள். பிசியோதெரபியில் யோகாவை ஓர் அங்கமாகச் சேர்த்தார்கள். 

கடும் எதிர்ப்பால் மருத்துவச் சமூகம் அதைத் தடுத்து நிறுத்தியது. ஐ.ஐ.டி-க்குப் பெரிய அளவில் நிதி ஒதுக்கி கோமியம் பற்றி ஆராய்ச்சி செய்ய வைக்கி றார்கள். 
சில மாதங் களுக்கு முன் ஆயுஷ் அமைச்சகத் திலிருந்து ஒரு சுற்றறிக்கை அனுப்பி யிருக்கிறார்கள். 
லிதுவேனியாவில் காதலனை பார்ப்பதற்கு காதலி எடுத்து துணிச்சல் முடிவு !
‘கர்ப்பிணிகள் முட்டை மற்றும் அசைவ உணவு களைச் சாப்பிடப் பரிந்துரைக்கக் கூடாது’ என்கிறது 

அது. கிராமப்புறப் பெண்க ளுக்குக் கோழி முட்டை தான் அதிகபட்ச ஊட்டச்சத்து. அதையும் காலி செய்யப் பார்க்கிறார்கள். 

அசாம் சுகாதாரத் துறை அமைச்சர், ‘பாவம் செய்தவர் களுக்குத்தான் கேன்சர் வரும்’ என்று கண்டு பிடித்திருக் கிறார்.

இப்படி மருத்து வத்தில் தங்கள் கொள்கை களைக் கலக்கும் முயற்சியைத் தொடர்ச் சியாகச் செய்கிறார்கள். 

மருத்துவர் களுக்காகச் செயல்படும் ஓர் அமைப்பில் மருத்து வர்களை அகற்றி விட்டு, ஆடிட்டர் களையும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் களையும் சேர்க்க இருக்கிறார்கள். 

இது மருத்து வத்தின் தரத்தை மேலும் கீழே கொண்டு செல்லும்” என்கிறார், சமூக சமத்து வத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.

தேசிய மருத்துவ ஆணையத்தில் 25 உறுப்பி னர்கள் இருப்பார்கள். இவர்களில் ஐந்து பேர் மட்டுமே மருத்துவர் பிரதி நிதிகள்; மற்ற 20 பேரும் அரசால் நியமிக்கப் படுபவர்கள். 

ஆணையத்தை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்கும். மருத்துவக் கல்வியின் தரத்தை மேம் படுத்தவும்,

மருத்துவக் கல்லூரி களைக் கண் காணிக்கவுமே ஆணையம் உருவாக்கப் படுவதாகச் சொல்லும் மத்திய அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி களுக்குச் சலுகை களைத் தாராளமாக வழங்குகிறது. 
McAfee யால் தெலைந்த போனை கண்டுபிடித்த பொலீஸார் - கட்டாயம் வாசியுங்கள் !
மருத்துவப் படிப்புக் கான இடங்களை அதிகரிக்க, இனி மருத்துவக் கல்லூரிகள் யாரிடமும் அனுமதி பெறத் தேவை யில்லை. 

தேவையான உள்கட்ட மைப்புகள் இருந்தால் அவர்களாகவே அதிகரித்துக் கொள்ளலாம். இப்போது தனியார் மருத்துவக் கல்லூரி களில் 65 சதவிகித இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்குத் தரப்படு கின்றன. 
இதிலும் கை வைக்கிறது, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம். இந்தச் சட்டப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் 

இனி 40 சதவிகித இடங்களை அரசுக்குத் தந்தால் போதும். 60 சதவிகிதம் அவர் களுக்கு. இவற்றை யெல்லாம் தாண்டி, டாக்டர்கள் இந்த ஆணைய த்தை எதிர்க்க இரண்டு காரணங்கள் உண்டு. 

வெளி நாடுகளில் மருத்துவம் படித்து விட்டு இந்தியா வரும் மாணவர் களுக்கு நடத்தப் படுவதைப் போலவே, 

இந்தியாவில் மருத்துவம் படித்துத் தேர்ச்சி பெறும் மாணவர் களுக்கும் இனி தேசிய உரிமத்தேர்வு நடத்தப்படும் என்கிறது இந்த ஆணைய மசோதா. 

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதுகலைப் படிப்பில் சேரமுடியும். ‘‘எம்.பி.பி.எஸ் என்பதே மருத்துவப் படிப்பு தான். 

அதை முடித்த பிறகு மீண்டும் ஏன் ஒரு தேர்வு?’’ என்று கேள்வி எழுப்புகி றார்கள் மருத்துவர்கள். 

‘சித்தா, ஹோமியோபதி, ஆயுர் வேதம், யுனானி, இயற்கை மற்றும் யோகா போன்ற மருத்துவப் படிப்புகளைப் படித்த வர்களும், 

பல் மருத்துவம் படித்தவர் களும், 6 மாத கால ப்ரிட்ஜ் கோர்ஸை முடித்தால் நவீன மருத்துவம் செய்யலாம். 
லலிதா கொள்ளை சம்பவத்தில் திருப்பம்... போலீசார் அதிர்ச்சி !
மேலும் அலோபதி சார்ந்த முதுகலைப் படிப்பு களிலும் சேரலாம். கிராமப்புறப் பகுதிகளில் போதிய அளவுக்கு மருத்து வர்கள் 

இல்லாத தால் மாற்று மருத்துவம் படித்தவர் களைத் தகுதிப்படுத்தி பயன் படுத்தவே இந்தத் திட்டம்’ என்கிறது மத்திய அரசு. 

‘இது மருத்துவ த்தின் தரத்தைக் குலைத்து விடும்’’ என்கிறார்கள் டாக்டர்கள். ‘தமிழ் நாட்டைப் பொறுத்த வரை, கிராமப் புறங்களில் மருத்துவச் சேவை ஓரளவுக்கு நிறைவாக இருக்கிறது. 

ஆனால், பிற மாநிலங்களில் இந்த நிலைமை இல்லை. அதனால் மாற்று மருத்துவம் படித்தவர் களையே மருத்துவ அதிகாரி களாக அந்த மாநில அரசுகள் நியமிக் கின்றன. 
‘மாற்று மருத்துவம் படித்தவர் களுக்கு நவீன மருத்துவப் பயிற்சியை வழங்குவதன் மூலம் அவர்களின் சேவையை மேம்படுத்த முடியும்’ என்று மத்திய அரசு நினைக்கிறது. 

பொதுவாக, இப்போது உலகெங்கும் ஒருங்கி ணைந்த மருத்து வத்துக்குப் பெரிய வரவேற்பு இருக்கிறது. 

சீனாவில், மருத்துவப் படிப்பில் முதல் இரண்டு ஆண்டுகள் பொது வான மருத்துவம் தான். அதன் பிறகு அலோபதியோ, சீன மருத்துவமோ எதை வேண்டு மானாலும் தேர்வு செய்து படிக்கலாம். 

இங்கு நவீன மருத்து வர்கள், மாற்று மருத்துவர் களைப் பார்க்கும் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. 
படிக்காத மேதையின் சம்பளம் 21 கோடி
இதைத் தெளிவு படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது’’ என்கிறார் சித்த மருத்துவ நிபுணர் கு.சிவராமன்.

அரசு மருத் துவர்கள், தேசிய மருத்துவ ஆணைய த்துக்கு எதிராகவே இருக்கி றார்கள். அனைத் திந்திய அரசு மருத்துவர் கூட்ட மைப்பின் கூடுதல் செயலாளர் பி.பால கிருஷ்ணன் நம்மிடம் பேசினார். 

‘‘இந்திய மருத்துவக் கவுன்சிலின் நிர்வாகிகள் ஊழல் செய்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. 

குற்றம் சாட்டப் பட்ட கேதன் தேசாய் வெளியில் வந்து இப்போது உலக மருத்துவச் சங்கத்துக்கே தலைவராகி விட்டார். 

அரசு என்ன செய்தது? மருத்துவக் கவுன்சிலின் மொத்த நிர்வாக த்தையும் மாற்றி, மருத்து வர்களின் பிரதி நிதித்துவ த்தைப் பிடுங்கி மொத்தமாக மத்திய அரசே கையகப் படுத்துவது நல்ல விஷய மில்லை.
பல் மருத்துவம், மாற்று மருத்துவம் படித்த வர்கள் 6 மாதம் பயிற்சி எடுத்த பிறகு, நவீன மருத்துவம் செய்ய லாம் என்பதும் திகைப் பூட்டுகிறது. 

சித்தா மற்றும் ஆயுர் வேதத்தின் தன்மையும் நவீன மருத்துவ த்தின் தன்மையும் அடிப்படை யில் வேறு. 

வாதம், பித்தம், கபம் ஆகிய வற்றை அடிப்படை யாக வைத்துச் சிகிச்சை யளிக்கும் முறை அவை. ஆனால், நவீன மருத்துவம் நாளுக்கு நாள் நவீன மாகிக்கொண்டி ருக்கிறது. 
6 மாத காலப் பயிற்சியில் அவர்கள் நவீன மருத்துவ த்தைக் கற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையே தவறானது. 

இந்தியா வில் மருத்துவத் துறை ஆக்க பூர்வமாக செயல்பட்டு வருகிறது. தேசிய மருத்துவ ஆணையம் இதைச் சீர் குலைத்து விடும்” என்கிறார் பால கிருஷ்ணன்.

ஏற்கெனவே நீட் தேர்வு இந்திய மருத்துவச் சூழலை பெரிதும் பாதித்திருக் கிறது. இப்போது தேசிய மருத்துவ ஆணையம்... இன்னும் என்ன வெல்லாம் வருமோ?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings