ஆசிரியரை மிரள வைத்த லீவ் லெட்டர் !

0
பள்ளி நாள்களில் விடுமுறையின் முக்கியத் துவத்தை நாம் உணர்ந் திருப்போம். விடுமுறைக்காக ஆசிரியர்களிடம் நாம் கூறிய பொய்கள் சில சமயம்,
ஆசிரியரை மிரள வைத்த லீவ் லெட்டர் !
நமக்கு சந்தோஷ த்தையும் சில சமயங்களில் தண்டனை யையும் பெற்றுக் கொடுத்தி ருக்கும். 

அந்த வகையில், ஒரு நாள் விடுப்புக்காக பாகிஸ்தான் பள்ளி மாணவன் ஒருவனின் வித்தியாசமான விண்ணப்பம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 

அப்படி என்ன வித்தியாசமாக அந்த மாணவன் செய்தான் என்று கேட்கிறீர்களா. கோர்வாலா பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன், தலைமை யாசிரியருக்கு எழுதியுள்ள விடுமுறை விண்ணப்பத்தைப் பாடலாகப் பாடி யுள்ளார். 

அந்தப் பாடலில் விடுமுறை விண்ணப் பத்தில் உள்ள புள்ளி, கமா உள்ளிட்ட நிறுத்தற் குறிகளையும் சேர்த்து அந்த மாணவன் பாடியுள்ளது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகரும் மனித உரிமை ஆர்வலருமான ஷெஷாத் ராய் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் வேகமாகப் பகிர்ந்து வரு கின்றனர். 
தயவு செய்து அவருக்கு விடுமுறை கொடுங்கள்’’ என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவை ராய் பகிர்ந்துள்ளார். 

அந்த வீடியோவைப் பகிர்ந்து வரும் நெட்டிசன் களும் அந்தச் சிறுவனுக்கு விடுமுறை அளிக்கும் படி தலைமை யாசிரியரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings