குளிர் காலத்தில் சளித் தொந்தரவு - தவிர்க்க வேண்டிய உணவு !

0
மார்கழிப் பனியில் மண்ணும் குளிரும்; தைப் பனியில் தரையும் குளிரும்' என்பது முன்னோர்கள் வாக்கு. 

இதை மெய்ப்பிப்பது போலவே, அந்தி சாயும் வேளையில் தொடங்கும் குளிர், அதிகாலை வரை மக்களை நடுநடுங்க வைத்துக் கொண்டிருக் கிறது. 

அடிக்கிற வாடைக் காற்றில் குளிர் நேரடியாக, நம் காது, மூக்கு, தொண்டையைத் தான் அதிகம் பாதிக்கிறது.

சளி பிடித்தல்

என்னதான் கம்பளி, மப்ளர் என மூகமுடி போட்டுக் கொண்டாலும், குளிர் நம்மை எளிதில் விடுவ தாக இல்லை. 

விளைவு, சளி, காய்ச்சல் போன்ற வற்றால் நிறைய அவஸ்தைப் படுகிறோம். 

ஒரு பக்கம் சளிக்கு மாத்திரை எடுத்துக் கொண்டி ருக்கும் வேளையில், மற்றொரு பக்கம் கண்ணில் படும் உணவுகளை யெல்லாம் உள்ளே தள்ளிக் கொண்டிருப் போம். 

காய்ச்சல் நேரத்தில் எப்படிக் குறிப்பிட்ட சில உணவு களைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்து வர்கள் அறிவுறுத்து கிறார்களோ 
அதே போல, சளிப் பிடித்தாலும், உணவில் அதிகம் கவனமாக இருக்க வேண்டும். 

ஏனெனில், ‘சில உணவுகள் இந்தப் பிரச்னையை இன்னும் தீவிர மாக்கும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். 

எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டும். சளிப் பிடித்தி ருக்கும் போது சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன? பார்க்கலாமா?

பால் பொருள்கள்

பால் பொருள் களைச் சளி பிடித்திருக்கும் நேரத்தில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது சளியின் அளவை அதிகரித்து, நோய்க் கிருமிகளின் தாக்க த்தையும் அதிகரிக்கச் செய்து விடும்.

செரிமான மாகவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதே நேரத்தில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொருள் களை உட்கொள்ள லாம். அதிலும், பாலுடன் மஞ்சள் பொடி, சேர்த்துச் சாப்பிடலாம்.

துரித உணவுகள்

சளி, காய்ச்சலின் போது பசி எடுக்காது; சுவை தெரியாது. இதனால், வழக்கமான உணவு சாப்பிட விருப்பம் இருக்காது. 

இதனால், மற்ற நாள்களை விட துரித உணவுகள் மேல் நாட்டம் செல்லும். ஆனால், துரித உணவு களில் ஊட்டச் சத்துகள் கிடைக்காது. 

அதோடு கலோரிகள் அதிகம் இருக்கும். மேலும், உணவில் நிறம், சுவையைக் கூட்ட செயற்கை நிறமூட்டிகள், 

சுவை யூட்டிகள், மோனோ சோடியம் குளூட்டமேட் (Monosodium glutamate) போன்றவை அதிகம் சேர்க்கப் பட்டிருக்கும். 

இது போன்ற உணவுகளை உடல்நிலை சரியில்லாத காலத்தில் சாப்பிட்டால், உடலின் மெட்ட பாலிசத்தை அது குறைத்து விடும்; 
கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் குறைத்து விடும். எனவே, துரித உணவு களைத் தவிப்பது சிறந்தது.

சர்க்கரை உணவுகள்

ரீஃபைண்டு செய்யப் பட்ட சர்க்கரை, செயற்கை சுவை யூட்டிகள், பதப்படுத்தப் பட்ட பொருள்கள், பாக்கெட்டில் 

அடைத்து விற்கப்படும் பழச் சாறுகள், மிட்டாய்கள் போன்ற வற்றில் சர்க்கரை அதிக மிருக்கும். 

இவை, சளி மற்றும் காய்ச்சலை உண்டாக்கும் பாக்டீரியா வைச் சமாளிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் குறுக்கிடும்.

எனவே, அதிக சர்க்கரை உட்கொண்டால், அது கபத்தை அதிகரிக்கச் செய்யும். 

இது, நோயை எதிர்த்துப் போராடும் வெள்ளை அணுக்களின் திறனைக் குறைத்து விடும். 

மேலும், கிருமிகள் வளர வளமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். குறிப் பாக, பழச்சாறுகள் குடித்தாலும் அதனுடன் சர்க்கரை சேர்க்க வேண்டாம். 

இனிப்புத் தேவை யெனில் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இயற்கைச் சர்க்கரை மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு களைச் சளிப் பிடித்தி ருக்கும் போது சாப்பிட லாம்.

இறைச்சி உணவுகள்

சளி, காய்ச்சல் இருக்கும் போது இறைச்சி உணவு களைத் தவிர்க்க வேண்டும். உடலின் ஜீரண சக்தி குறைவாக இருக்கும் 

அந்தச் சமயத்தில் இறைச்சி போன்ற அதிக கலோரி உள்ள உணவைச் சாப்பிட்டால் அவை செரிமான மண்டல த்தை பாதிக்கும். 

சைவ உணவு களில் ஆன்டி ஆக்ஸிடன் டுகள் இருப்பதால், அவை பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்துப் போராடும்.

இறைச்சி களில் அசிடிட்டி அளவு அதிகமாக இருப்பதால், அது உடலில் உள்ள இயற்கை அமிலங்களுக்கு இடையூறை ஏற்படுத்தும். 

இதனால் உடலில் அசிடிட்டி யின் அளவு, உட்காயங்கள் அதிகரிக்கும். எனவே, அமில உணவு களையும் சளி பிடித்திருக்கும் போது சாப்பிடக் கூடாது.

ஆல்கஹால்

ஒரு பெக் ரம், பிராந்தி போன்ற வற்றைக் குடித்தால், எப்பேர்பட்ட சளியும் நீங்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். 

குளிர் காலத்திலும் சளி பிடித்தி ருக்கும் நேரத்திலும் தொண்டைக்கு ஒரு வகையில் இதம் கொடுப்பது போல இருக்கும். 

அது தற்காலிக நிவாரணம் தான். உண்மையில், ஆல்கஹால் பருகினால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடல் வறட்சி அதிகரித்து, சளியின் அளவோடு, காய்ச்சலும் அதிகரித்து விடும்.
எண்ணெயில் வறுத்த உணவுகள் குளிர் பானம்

எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவு களிலும், கொழுப்பு நிறைந்த உணவு களிலும் கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கும். 

அவை வயிற்று உபாதை களைக் கொடுக்கும். அதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கும்.

எனவே, ஃபிரைடு சிக்கன், ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ் போன்ற பொரித்த உணவு களையும், ஜங்க் உணவு களையும் சளிப் பிடித்திருக்கும் போது தவிர்க்க வேண்டும்.

குளிர் பானங்கள்

சளிப் பிடித்தி ருக்கும் போது வெந்நீர் அல்லது சூடான பானங் களைப் பருகினால் அதன் நீராவி மூக்கின் நாசிகளைத் திறந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கச் செய்யும். 

அதே நேரத்தில் குளிச்சி யான பானங் களைப் பருகினால் அது தொண்டைப் புண்ணை ஏற்படுத்தும் அல்லது 

தொண்டைப் புண் இருந்தால், அதை அதிகரிக்கச் செய்யும். எனவே, குளிர் பானங்களை யும் ஐஸ்க்ரீம் போன்ற வற்றையும் தவிர்க்க லாம்.

உடலை கதகதப்பாக வைத்தி ருக்கும் ஆடைகளை அணிவதும், மிதமான சூடுள்ள நீரில் குளிப்பதும் சளியிருக்கும் காலங்களில் அந்தப் பிரச்னையை எதிர் கொள்ள உதவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)