விமானத்தில் பாலியல் தொல்லை விளம்பரத்துக்காக நடந்தது... மனைவி !

0
நடிகர் அமீர்கான் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட இந்திப்படம் தங்கல்.  தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட இந்த படத்தில் அறிமுக மானவர் நடிகை சாயிரா வாசிம் (வயது 17). 
விமானத்தில் பாலியல் தொல்லை விளம்பரத்துக்காக நடந்தது... மனைவி !
சிறந்த துணை நடிகைக் கான தேசிய விருதை வென்ற இவர், ‘சீக்ரட் சூப்பர்ஸ்டார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

காஷ்மீரை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் ‘ஏர் விஸ்டாரா’ என்ற தனியார் விமானம் மூலம் டெல்லி யில் இருந்து மும்பைக்கு பயணம் செய்தார். 

விமானம் நடுவானில் பறந்து கொண்டி ருந்தது. அந்த விமான த்தில் சாயிரா வின் பின் இருக்கை யில் நடுத்தர வயதை சேர்ந்த ஒரு ஆண் பயணம் செய்தார். 

அவர், தனக்கு முன் உள்ள இருக்கையில் இருந்த சாயிரா வுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக சாயிரா ‘இன்ஸ்டா கிராம்’ சமூக வலைத் தளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். 

அதில் அவர் தனக்கு விமான பயணத்தின் போது நேர்ந்த கதியை மிகுந்த வேதனை யுடன் விவரித்தார். 
அப்போது அவர் பல நேரம் மனம் உடைந்து போனார். ‘‘இது ஒரு பயங்கர மான அனுபவம், இப்படிப் பட்ட தருணங் களில் நாம் நமக்கு நாமே தான் உதவிக் கொள்ள வேண்டும். 

யாரும் உதவிக்கு வர மாட்டார்கள்’’ என்று வேதனை யுடன் கூறினார். ‘‘இப்படி யாருக்கும் நடக்கக் கூடாது, நான் மிகவும் கஷ்டப் பட்டேன். 

இப்படி யெல்லாம் நடந்தால் எப்படி பெண் பிள்ளை களுக்கு பாதுகாப்பு கொடுப்பீர்கள்? இப்படி உணர்கிற நிலை இனி யாருக்கும் வரக்கூடாது. இது பயங்கர மானது’’ என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து தெரிய வந்தவுடன் ஏர் விஸ்டாரா விமான நிறுவனம், நடிகை சாயிரா வாசிமிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. 

சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத அந்த விமான பயணி மீது மும்பை சாஹர் போலீசார், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354 (மானபங்கம்) மற்றும் பாலியல் குற்றங் களில் இருந்து 

பெண் குழந்தை களை பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
விசாரணையில், சாயிராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மும்பையை சேர்ந்த தொழிலதிபர் என தெரிய வந்தது. 

இதை யடுத்து, உடனடி யாக அவரை கைது செய்து ள்ளனர். கைது செய்யப் பட்ட தொழிலதிபரின் பெயர் விகாஸ் சச்தேவ் என்ப தாகவும்.  36 வயதான அவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப் படுத்தப்படு கிறார். 

இதனிடையே ஊடகங் களுக்குப் பேட்டியளித்த விகாஸின் மனைவி என் கணவர் சமூதா யத்தில் ஒரு நல்ல இடத்தில் இருக்கும் தொழிலதிபர். என் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர். 

எங்கள் நெருங்கிய உறவினரின் இறுதிச் சடங்கிற்காக தான் என் கணவர் டெல்லியி லிருந்து மும்பை பயணித்தார். இறுதிச் சடங்குக்கு வருகிறார். 

சோகமான மன நிலையில் இருக்கும் அவர் மீது இப்படி ஒரு பழி சுமத்துவது அதிர்ச்சி யளிக்கிறது. நடிகையுடன் அவரின் தாயும் பயணம் செய்திருக் கிறார். 

அப்படி இருக்கும் போது, என் கணவர் தவறாக நடந்து கொள்ளும் போது அவரை ஏன் தாக்க வில்லை, கூச்சல் எழுப்ப வில்லை... அலாரம் பட்டனை அழுத்த வில்லை... 

இரண்டு மணி நேரம் கழித்து சமூக வலை தளங்களில் பதிந்தது ஏன்? இது முழுக்க முழுக்க விளம்பர த்துக்காகச் செய்தது' என்று விகாஸின் மனைவி குற்றம் சாட்டி யுள்ளார்.
விகாஸின் மனைவி க்கு பதிலளி க்கும் விதமாக நெட்டி சன்கள் கொந்தளித்து வருகின்றனர். பாலியல் தொந்தரவுக் குள்ளாகும் பெரும் பாலான பெண்கள், உடனடி யாக ரியாக்ட் செய்ய முடியாது. 

பயமும், தயக்கமும் இருப்பது சகஜம்தான். பாதிக்கப் பட்ட நடிகை மைனர். அவருக்கு இந்தச் சூழலைக் கையாளும் பக்குவம் போத வில்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings