தர்காவின் கந்தூரி எனும் தேரோட்டம் !

வணங்கு வதற்கு தகுதி யானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே இஸ்லாத்தி ன் அடிப்படைக் கொள்கை யாகும். 
தர்காவின் கந்தூரி எனும் தேரோட்டம் !
இருந்தாலும் முஸ்லிம்க ளில் சிலர், இறந்தவர்க ளை அடக்கம் செய்து, கப்ரின் மீது கட்டிடம் கட்டி தர்கா வழிபாடு செய்கின்றனர். 

அல்லாஹ்வி டம் மட்டுமே பிரார்த்தனை, நேர்ச்சை மற்றும் அறுத்து பலியிடல் போன்ற வழிபாடுகளை செய்ய வேண்டும். 
அல்லாஹ்வை யன்றி இறை நேசர்கள் என மற்றவர்க ளிடம் இவ்வாறு செய்வது இறைவன் மன்னிக்க முடியாத குற்ற மாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய அடக்கஸ்த லத்தையே விழா கொண்டாடும் இடமாக ஆக்கி விடாதீர்கள் (அபூதாவூத் 1746) என தடுத்தி ருக்கும் போது, 

இறை நேசர்கள் என்று கருதிக் கொண்டு அவர்களது அடக்கத்த லங்களில் கந்தூரி விழா எடுப்பது நபி வழியாகுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
*நல்லறங்கள் அழிந்து விடும்:*

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறங்கள் அழிந்து விடும். நீர் நஷ்ட மடைந்தவராவீர். (திருக்குர்ஆன் 39:65-66)

*மிகவும் கெட்டவர்கள்*

அவர்களில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து இறந்து விட்டால் அவரது அடக்கத்த லத்தின் மேல் வணக்கத்த லத்தை எழுப்பி கொள்கின்றனர் 
வைரமுத்து சொன்ன ஆபாச கவிதை வைரலாகும் ஆடியோ பதிவு உள்ளே !
இவர்கள் தான் அல்லாஹ்வின் படைப்பு களில் மிக கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி 427)

*இறந்தோர் செவியுற பதில் தர மாட்டார்கள்*

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள்.

செவி யேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். (திருக்குர்ஆன் 35:14)

*இறந்தவரிடம் பிரார்த்தி க்காதீர்கள்*
அல்லாஹ்வை யன்றி உமக்கு பயனும், தீங்கும் தராதவற்றை பிரார்த்திக்கா தீர்கள்! அவ்வாறு செய்தால் நீர் அநீதி இழைத்த வராவீர். (திருக்குர்ஆன் 10:106)

*கட்டிடம் கட்டக்கூடாது*

கப்ருகள் கட்டப்ப டுவதையும் பூசப்படு வதையும் நபி ஸல் அவர்கள் தடை செய்தார்கள். (முஸ்லிம் 1610)

*நிரந்தரமான நரகம்*

யார் அல்லாஹ்வி ற்கு இணை கற்பித்த நிலையில் மரணிக்கி ன்றாரோ அவர் நரகத்தில் நுழைவார். என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புஹாரி 1238)
ஆண் வேடமிட்டு பெண்ணை மணந்த பெண் வீடியோ !
*மன்னிப்பே இல்லை*

தனக்கு இணை கற்பிக்கப்ப டுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் (திருக்குர்ஆன் 4:48)

*அல்லாஹ்வின் சாபம் வேண்டாம்*

யூத நஸராக்களை அல்லாஹ் சபித்து விட்டான். (ஏனெனில்) தங்க ளுடைய நபிமார்க ளின் கப்ருகளை வணங்கு மிடமாக எடுத்துக் கொண்டனர் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புஹாரி 1330)
*இணையாக்க வேண்டாம்*

அல்லாஹ்வை வணங்கு ங்கள்! அவனுக்கு இணையாக எதையும் கருதாதீர்கள். (திருக்குர்ஆன் 4:36)

*தர்காவிற்கா செல்கிறோம் வேடிக்கை பார்க்க தானே செல்கிறோம் என்பவர்க ளுக்கு*

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்ப ட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! 
MeToo என்றால் என்ன? வீடியோ !
(அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்ற வர்களே என்று இவ்வேத த்தில் உங்களுக்கு அவன் அருளி யுள்ளான். 

நயவஞ்சக ர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவ ரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான். (திருக்குர்ஆன் 4:140)
ஒரு சபையில் அல்லாஹ்வின் கட்டளை மீறப்ப டுகிறது. அதன் மூலம் அல்லாஹ்வி ன் வசனங்கள் கேலி செய்யப்ப டுகிறது என்றால் அந்தச் சபைகளில் நாம் அமரவே கூடாது.

அவ்வாறு அமர்ந்தால் நாம் அவர்களைப் போல் இறைவனால் கருதப்ப டுவோம் என்ற எச்சரிக்கை காரண மாகவே சில நிகழ்ச்சி களைப் புறக்கணி க்கச் சொல்கிறோம்.

எனவே தர்கா வழிகேடு பாவத்தி லிருந்து மீண்டு அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கு வோராகவும், அவனிடமே உதவியும் தேடுவோ ராகவும் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக!
Tags:
Privacy and cookie settings