பாகிஸ்தான் தூதருக்கு செருப்பு அனுப்பிய பாஜக !

0
குல்பூஷண் ஜாதவின் மனைவியையும் தாயையும் அவமதித்த பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 
பாகிஸ்தான் தூதருக்கு செருப்பு அனுப்பிய பாஜக !
பாகிஸ்தான் தூதரகத்துக்கு ஒரு ஜோடி செருப்புகளை பாஜக மூத்த தலைவரும் கட்சியின் டெல்லி மாநில செய்தித் தொடர் பாளருமான தஜிந்தர் பக்கா அனுப்பி வைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக உளவு பார்த்ததா கவும், தீவிரவாத சதித் திட்டம் தீட்டிய தாகவும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் மீது குற்றம் சாட்டி மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

தற்போது பாகிஸ்தான் சிறையில் அடைக்கப் பட்டுள்ள ஜாதவை, இந்தியா வின் முயற்சி யால் அவரது மனைவியும் தாயும் கடந்த 25-ம் தேதி பாகிஸ்தான் சென்று சந்தித்தனர்.

அப்போது குல்பூஷணின் மனைவி மற்றும் தாயின் தாலி, பொட்டு, வளையல் களை அகற்றச் சொல்லி பாகிஸ்தான் அதிகாரிகள் அவமானப் படுத்தினர்.
குல்பூஷண் மனைவி யின் ஷூவில் கம்ப்யூட்டர் சிப்ஸ் இருக்க லாம் என்று சந்தேகப் படுவதாகக் கூறி 

அவற்றை கழற்றச் சொன்னதுடன் சந்திப்பு முடிந்த பின்னும் ஷூக்களை திருப்பித் தராமல் பாகிஸ்தான் அதிகாரிகள் அனுப்பினர்.

பாகிஸ்தானின் இந்த மனித உரிமை மீறல் செயலுக்காக நாடாளு மன்றத்தில் நேற்று முன்தினம் கண்டனம் தெரிவிக்கப் பட்டது.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசும் போது பாகிஸ்தானு க்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு 

ஒரு ஜோடி செருப்புகளை டெல்லி மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் தஜிந்தர் பக்கா அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், அனைவரும் பாகிஸ்தான் தூதரகத்து க்கு செருப்பு அனுப்பி வைக்கும் படியும் அவர் கோரி யுள்ளார். இது குறித்து ட்விட்டரில் தஜிந்தர் கூறும் போது, பாகிஸ்தான் நமது செருப்பு களை விரும்புகிறது.

நாம் செருப்புகளை கொடுப்போம். நான் செருப்பு களை வாங்க பணம் கொடுத்து அவற்றை பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

இதேபோல எல்லாரும் ஒரு ஜோடி செருப்புகளை வாங்கி பாகிஸ்தான் தூதரகத் துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

செருப்புக் காக கொடுத்த ஆர்டர்களை ஸ்கிரீன் ஷாட் மூலம் ட்விட்டரில் தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings