18 மணி நேரத்தில் உயிரிழந்த மணப்பெண் !

0
மார்பக புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்த பெண்ணிற்கு மருத்துவ மனையில் திருமணம் நடந்த நிலையில் அடுத்த 18 மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
18 மணி நேரத்தில் உயிரிழந்த மணப்பெண் !
அமெரிக்காவின் ஹார்போர்ட் நகரில் வசித்து வருபவர் டேவிட் மோஷர் (35). இவரும் ஹீத்தர் லிண்ட்சே (31)  என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக நண்பர் களாக இருந்து வந்துள்ளனர். 

ஒரு சமயத்தில் இவ்விரு வருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலை யில் கடந்தாண்டு டிசம்பர் 23-ஆம் லிண்ட்சேவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

மருத்துவ மனைக்கு சென்ற பரிசோதனை செய்த போது லிண்ட்சேவுக்கு மார்பக புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. 

ஆனாலும் தனது காதலில் இருந்து டேவிட் பின் வாங்க வில்லை. லிண்ட்சே தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த செப்டம்பரில் புற்று நோய் அவரின் மூளை மற்றும் 

நுரையீரலுக்கு பரவியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் லிண்ட்சே தனது கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவமனை படுக்கையில் படுத்தபடியே டேவிடை லிண்ட்சே திருமணம் செய்து கொண்டார். இந்த நெகிழ்ச்சி கரமான சம்பவத்தை பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கண் கலங்கினார்கள். 

திருமணம் நடந்த அடுத்த 18 மணி நேரத்தில் லிண்ட்சே பரிதாப மாக உயிரிழந்தார். இதனால் அவரின் காதலர் மற்றும் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings