சொன்னதைக் கேட்கும் புதிய பல்ப் !

0
அமெரிக்காவை சேர்ந்த MicroNovelty என்ற நிறுவனம் கண்டறிந்துள்ள புதிய பல்ப் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் பயன்பாடு குறித்த வீடியோ பதிவினை MicroNovelty நிறுவனம் வெளியிட் டுள்ளது.
சொன்னதைக் கேட்கும் புதிய பல்ப் !
ப்ளூடூத் மற்றும் வைஃபை என எந்தவித வசதியும் இல்லாமல் மொபைல் அப்ளிகேஷன் மூலம் இயங்கும் இந்தப் புதுமையான பல்ப் சப்தங்களை உணர்ந்து செயல்படும் வகையிலும் வடிவமை க்கப்பட் டுள்ளது. 

இதனை ஸ்மார்ட் போன்களில் உள்ள அப்ளிகேஷனுடன் இணைத்துக் கொண்டு நமக்குத் தேவையான MODE- களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

HEELIGHT எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த புதிய பல்பில் ரீடிங், கேண்டில் லைட், நைட் லேம்ப், ஹால்லோவீண், சன்ரைஸ் அன்ட் சன்செட் என பல்வேறு MODE-களைக் கொண்டுள்ளது.

நைட் லேம்ப் என்ற MODE-ஐ ஆக்டிவேட் செய்தால் சப்தங்களின் அளவை வைத்து அதற்கு ஏற்றாற் போல் வெளிச்சத்தை அதிகரிக் வும் குறைக்கவும் செய்கிறது. 
அதே போல் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ள இந்த பல்ப் விலை ரூ.1800. 

இதன் வெளியீடு இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. இணையத்தில் வெளியாகிய இதன் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings