காவல் நிலையத்தில் டிஜே பார்ட்டி !

0
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் முன் மேடை அமைத்து டிஜே பார்ட்டியில் நடனம் ஆடிய போலீசார் இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
காவல் நிலையத்தில் டிஜே பார்ட்டி !
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்ட த்தில் திப்னா கெதா என்ற கிராமத்தில் உள்ள காவல் நிலை யத்தில் யோகேந்திர பார்மர் என்பவர் இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருகிறார். 

இவரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த செய்தி அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

யோகேந்திர பார்மர் மீது துறை ரீதியான விசாரணை முடிவடை யாமல் இருந்த தால் அவரது பணியிட மாற்றம் உத்தரவு நிறுத்தி வைக்கப் பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

அதை கொண் டாடவும் முடிவு செய்தனர். இதை யடுத்து காவல் நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி விளக்கு களால் அலங்கரி க்கப்பட்டது. காவல் நிலையத்தின் வாயிலில் மேடை அமைத்து நடன நிகழ்ச்சியும் நடை பெற்றது. 
இதில் கிராம மக்களும், காவலர்களும் சேர்ந்து நடன மாடினர். காவலர்கள் நடன மாடும் வீடியோ வெளியாகி வைரலாகி யுள்ளது. இது குறித்து விதிஷா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வினீத்கபூரிடம் புகார் அளிக்கப் பட்டது. 

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப் பட்டு யோகேந்திர பார்மர் இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். மேலும் அங்கு பணிபுரிந்த 3 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings