டெல்லியில் மாசு குறைந்து கட்டுப்பாடுகள் நீக்கம் !

0
டெல்லியில் காற்று மாசு பாதிப்பு குறைந்து வருவதால் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் விதித்த கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட் டுள்ளன.
டெல்லியில் மாசு குறைந்து கட்டுப்பாடுகள் நீக்கம் !
டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் காற்றுமாசு காணப்பட்டது.

காற்று தரக்குறியீடு (ஏக்யூஐ) பல இடங்களில் 500க்கும் அதிக மாகச் சென்றதால் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

பனி மூட்டம் போன்று காற்று மாசு சூழ்ந்துள்ள தால் மக்கள் பாதிக்கப் பட்டனர். பள்ளி களுக்கு மாணவ, மாணவியர் முக மூடிகளை அணிந்து சென்றனர்.

முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத தால் நெடுஞ் சாலைகளில் விபத்துகள் நடந்தன.

இதையடுத்து டெல்லியில் காற்று மாசு பாதிப்பைக் குறைக்க, சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதன்படி, டெல்லி மற்றும் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங் களில் உள்ள தலைநகர் மண்டல பகுதி களில் கட்டு மானப் பணி களுக்கு தடை விதிக்கப் பட்டது.

அந்தப் பகுதியில் சரக்கு வாகனங்கள் வருவ தற்கும் முழுமை யாக தடை விதிக்கப் பட்டது. வாகன நிறுத்த கட்டணமும் கணிசமாக உயர்த்தப் பட்டது. நவம்பர் 8-ம் தேதி முதல் இந்தக் கட்டுப் பாடுகள் அமலில் உள்ளன.

இந்நிலை யில் டெல்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் காற்று மாசு அளவு குறைந் துள்ளது. சில நாட்களாக இயல்பு நிலைமை திரும்பி வருகிறது.

இதை யடுத்து, சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் பிறப்பித்த கட்டுப் பாடுகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.

இது தொடர்பாக டெல்லி மற்றும் சம்பந்தப் பட்ட மாநில அரசுக ளுக்கு சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணைய த்தின் சார்பில் கடிதம் எழுதப் பட்டுள்ளது.
அதில், டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதி களில் காற்று மாசு அளவு குறைந் துள்ளதால் கடுமையான நடவடி க்கை தேவை இல்லை. எனவே கட்டுப் பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என தெரிவிக் கப்பட் டுள்ளது.

எனினும், காற்று மாசு அளவைக் கண்காணித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கு மாறும் அந்தக் கடிதத்தில் வலி யுறுத்தப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings