ரன் ப்ளாட் டயர் என்றால் என்ன?

அதிநவின தொழில் நுட்பம் மற்றும் 100% பாதுகாப்பு வசதியை கொண்டது தான் ரன் ப்ளாட் டயர்கள். பொதுவாக விவிஐபி கார்களில் இந்த டயர்கள் தான் பொருத்தப் படுகின்றன.
டயர்களில் திடீரென காற்றின் அழுத்தம் குறைந்தாலும், பஞ்சரானாலும் ரன்ப்ளாட் கார்களில் கண்ணை மூடிக்கொண்டு பயணத்தை தொடரலாம். 

இதில், ட்யூபை சுற்றிலும் பொருத்தப் பட்டுள்ள 'சைடுவால்' எனப்படும் கடின மான டயர்பகுதி காரின் எடையை தாங்கிக் கொள்ளும். இதே போன்று, விஷேச ரிம்களும் இதில் பொருத்தப் பட்டுள்ளன. 

இதனால், டயரில் காற்று குறைந் தால் கூட காரின் பேலன்ஸ் குறை யாமல் சீராக செல்லும் என்பதால் விபத்து ஏற்படாது. 

டேஷ் போர்டில் பொருத் தப்பட்டி ருக்கும் இன்டிகேட்டர் டயர் களில் காற்று குறைந் தால் அது குறித்து டிரைவரை எச்சரிக்கும். இருப்பினும், உடனடியாக டயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. 
டயர்களில் காற்று இல்லா விட்டால் கூட காரை அதிகப் பட்சம் 80 கி.மீ. வேகத் தில் குறிப்பிட்ட தூரம் வரை ஓட்டி செல்ல முடியும். 

இந்த டயர் பொருத்த ப்பட்டிரு க்கும் கார்களில் ஸடெப்னி டயர் தேவை யில்லை என்பதால், 20 கிலோ வரை காரின் எடை குறையும் என்பதால் எரிபொருள் சிக்கன த்தை பெற முடியும்.
Tags: