மாருதி தொழிற்சாலை மூட காரணமான புலி !

0
மாருதி சுசுகி கார் தொழிற்சாலையில் நுழைந்த சிறுத்தைப் புலி ஏறத்தாழ 36 மணி நேரங்களுக்கு பின் பிடிப்பட்டது.
மாருதி தொழிற்சாலை மூட காரணமான புலி !
தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள மனேசர் நகரத்தில் உள்ள தொழிற் சாலைக்குள் நுழைந்த சிறுத்தைப் புலியை பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின், வனத் துறை ஊழியர்கள் மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்.

இந்த சிறுத்தைப் புலி முதலில் தொழிற் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா வில் வியாழக் கிழமை காலை தென் பட்டது. அதன் பின்பு, தொழிற் சாலைக் குள் பல இடங் களில் தென் பட்டிருக் கிறது.

இரவு பணியில் வேலைப் பார்த்த வர்கள் உடனே வெளி யேற்றப் பட்டனர். பரந்து விரிந்த தொழிற் சாலை யின் ஒரு பகுதி உடனே மூடப் பட்டது.
இந்த கார் உற்பத்தி தொழிற்சாலை தான் இந்தியா விலேயே மிகப் பெரிய தொழிற் சாலை ஆகும். இங்கு ஆண்டுக்கு பத்து லட்சத் திற்கும் மேலான கார்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன.

வியாழக் கிழமை வழக்கம் போல பணிக்கு வந்த பகல் நேர ஊழியர்கள், வாசலுக்கு வெளியே தடுத்து நிறுத்தப் பட்டனர்.

அதே சமயம், தொழிற் சாலைக் குள் 12 வனத்துறை ஊழியர் களும், 50 காவல் துறையி னரும் தேடுதல் வேட்டையில் ஈடு படுத்தப் பட்டனர்.

ஆறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்தி ருக்கும் இயந்திர உற்பத்தி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தைப் புலி தென் பட்டது.

சிறுத்தைப் புலியை ஈர்த்து வெளியே கொண்டு வர மீட்பு பணியினர் இரண்டு ஆடுக ளையும், பச்சை மாமி சத்தையும் கொண்டு வந்தனர்.

அதே சமயம், சிறுத்தைப் புலியை உள்ளிருந்து விரட்ட பட்டாசை சிலர் கொளுத்தி உள்ளே போட் டார்கள் என்று வன பாது காவலர் வினோத் குமார் பிடிஐ செய்தி முகமை யிடம் தெரிவித்தார்.
சிறுத்தைப் புலி கண்டுப் பிடிக்கப் பட்ட உடன் அதற்கு மயக்க மருந்து செலுத்தி பாது காப்பாக பிடிக்கப் பட்டது என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.

பிடிப்பட்ட சிறுத்தைப் புலி, மருத்துவ பரிசோத னைக்காக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டது. 

பரிசோதனை முடிந்த வுடன் அது வனப் பகுதியில் விடப் பட்டது என்று டெல்லி குர்கான் புறநகரின் வனத்துறை துணை பாது காப்பாளர் தெரி வித்தார்.

மனிதர்க ளுக்கும் விலங்கு களுக்கு மான மோதல் சம்பவ ங்கள் இந்தியா வில் அதிக ரித்து வருகிறது. 

விலங்குகளின் வாழ்விடம் சுருங்கியதால், யானைகள், புலிகள் மற்றும் சிறுத்தைப் புலிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.

இந்தியா வில் ஏறத்தாழ 12,000 - 14,000 சிறுத்தைப் புலிகள் உள்ளன. தோராய மாக நாள் ஒன்றுக்கு ஒரு சிறுத்தைப் புலி கொல்லப் படுகிறது.
கடந்த ஆண்டு ஒரு சிறுத்தைப் புலி பெங்களூ ரில் உள்ள ஒரு பள்ளி யில் நுழை ந்தது. அதை பிடிக்கும் முயற்சி யில் ஆறு பேர் காய மடைந்தனர். 

பின்பு, மயக்க மருந்து செலுத்து அந்த சிறுத்தைப் புலியை பிடிக்க 10 மணி நேரத்து க்கும் மேலானது. ஆனால், ஒரு வாரத் திற்கு பின்பு, அது அடைத்து வைக்கப் பட்டிருந்த கூண்டி லிருந்து தப்பியது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings