ஆஸ்திரேலிய பாதுகாப்பு திட்டம் திருட்டு !

0
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் பெரியளவில் நடைபெற்ற கணினி ஊடுருவல் ஒன்றில் திருடப்பட்டுள்ளன. 
ஆஸ்திரேலிய பாதுகாப்பு திட்டம் திருட்டு !
இந்த ஊடுரு வலின் போது, அரசாங்க ஒப்பந்த தாரர் வசமிருந்த சுமார் 30 ஜிபி அளவி லான தகவல்கள் திருடப் பட்டுள்ளன. அதில், புதிய போர் விமா னங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் குறித்த தகவல் களும் அடங்கும்.

இந்தத் தகவ ல்கள் வர்த்தக ரீதியி லாக மிக முக்கிய மானவை என்றும், ஆனால் ரகசியத் தகவல் கிடையாது என்றும் அரசாங்கம் தெரிவித் nதுள்ளது. 

தகவல் திருட்டு சம்பவ த்தில் பிற நாடு களுக்கு தொடர்பு இருக்கி றதா என்பது ஆஸ்திரேலிய அரசாங் கத்திற்கு தெரிய வில்லை.

கணினி யில் ஊடுருவிய மர்ம நபருக்கு ஆஸ்திரேலிய கணினி பாதுகாப்பு அதிகாரி கள் 'ஆல்ஃப்' என்று பெயரிட் டுள்ளனர். கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த கணினி ஊடுருவல் தொடங்கி யுள்ளது. 
ஆனால், நவம்பர் மாதம் வரை கணினி ஊடுருவல் குறித்து ஆஸ்திரேலியாவின் சமிக்ஞைகள் இயக்கு நரகம் எச்சரிக்கை செய்யப்பட வில்லை. ஊடுருவிய நபர் குறித்த அடையாளம் தெரியவில்லை.

இந்த தகவல் திருட்டில் ஈடு பட்டவர்கள் பல்வேறு தரப்பி னராக இருக்க லாம் என்று ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு தொழில் அமைச்சர் கிரிஸ்டோஃபர் பைன் ஏ பி சி செய்தி நிறுவன த்திற்கு இன்று அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித் துள்ளார்.

இந்த தகவல் திருட்டி னால் நாட்டின் தேசிய பாது காப்பிற்கு எவ்வித அச்சுறு த்தலும் இல்லை என்று தனக்கு உறுதி வழங்கப் பட்டுள்ள தாக பைன் மேலும் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings