கேட்டலோனியாவின் பாராளுமன்றத்தை கலைக்க ஸ்பெயின் திட்டம் !

0
ஸ்பெயின் பிரதமர் பிரிவினை வாத பிராந்தி யத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அப்பிராந்தி யத்தின் தலைவர் களை நீக்குவ தற்கான திட்டங் களை அறிவித் துள்ளார்.
கேட்டலோனியாவின் பாராளுமன்றத்தை கலைக்க ஸ்பெயின் திட்டம் !
சனிக் கிழமை யன்று நடத்த ஒரு அவசர அமைச்சரவைக் கூட்டத் திற்குப் பிறகு பேசிய ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய்,

கேட்ட லோனி யாவின் பாராளு மன்றத்தை கலைப் பதை பற்றி சுருக்கமாக தெரிவித்து விட்டு, அப்பகு தியில் தேர்தலை நடத்து வதற்கான திட்டங் களை முன் வைத்தார்.

அக்கூட்ட த்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் இன்னும் சில தினங் களில் ஸ்பெயி னின் செனட் சபையில் நிறை வேற்றப் படும் என்று தெரிகிறது.

கேட்ட லோனியா சுதந்திரத் திற்கான கருத்த றியும் வாக்கெடுப்பு நடத்தி சுமார் மூன்று வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இத்திட் டங்கள் வந்துள்ளன.

ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம் அவ்வாக் கெடுப்பு சட்ட விரோத மானது என்றும், அது அரசிய லமைப்பை மீறுவதா கவும் கூறியது.
சுதந்திர நாட்டை அமைக்கும் முயற்சியைத் திரும்பப் பெற அந்நாட்டின் மத்திய அரசாங்கம் விடுத்த வேண்டு கோளை கேட்டலான் அரசின் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் நிராகரித் துள்ளார்.

கேட்டலான் அரசாங் கத்தின் நடவடி க்கைகள் "சட்டத் திற்கு புறம் பானது மற்றும் மோதல் போக்குடன்" உள்ள தென்று கூறிய ரஜோய்,

கேட்டலோனி யாவில் நேரடி ஆட்சியை அமைப்பதை தவிர வேறு வழி யில்லை என்று கூறினார்.

ஸ்பெயின் நாட்டின் அரசிய லமைப்பின் 155-வது பிரிவானது, அந்நாட்டில் உள்ள அரை தன்னாட்சி பிராந்தி யங்களில் நெருக்கடி நிலை ஏற்படும் போது நேரடி ஆட்சியை திணிக்க அனுமதி க்கிறது.

இது குறித்து, ஸ்பெயினின் செனட் சபை ஒரு வாரத்தில் வாக்களி க்கவுள்ள தாக பத்திரிகை யாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் ரஜோய் தெரிவித்தார்.

அச்சட்டப் பிரிவை செயல் படுத்துவது "எங்களின் விருப்பமும் அல்ல, அது எங்களின் எண்ணமும் அல்ல" என்றார்.

அரசிய லமைப்பின் 155-வது பிரிவு அறிமுகப் படுத்தப் பட்ட ஆறு மாதங் களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சட்ட விதிகள் கூறினாலும்,

வெகு விரை விலேயே தேர்தல் நடத்தப்படு மென்று ரஜோய் தெரிவித் துள்ளார்.
ராஜோய் மற்றும் அவரின் கூட்டா ளிகள் தன்னாட்சி அதிகார த்தை மட்டும் நீக்க வில்லை ஜனநாய கத்தையே நீக்க முடிவு செய்து ள்ளனர்

என்று கேட்ட லோனிய அரசின் துணை தலைவர் ஓரியோல் ஜோன்கிரஸ் கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings