நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்... ட்விட்டரில் ஹாஷ்டேக் !

0
பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில் பாதிக்கப் பட்ட நடிகை களுக்கு ஆதரவாக,
நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்... ட்விட்டரில் ஹாஷ்டேக் !
ட்விட்டரில் பெண்கள் பலரும் தங்களது பாலியல் துன் புறுத்தல் அனுபவங் களை #MeToo என்ற ஹாஷ் டேக்கில் பதிவிட்டு டிரெண்டாக்கி வரு கின்றனர்.

ஹாலி வுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (65). 

இவர் கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக நடிகைகள், பெண் உதவி யாளர்களு க்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கடந்த வாரம் நியூ யார்க் டைம்ஸ் விரிவான செய்தி ஒன்றை வெளி யிட்டது.

ஹாலிவுட்டின் பிரபல நடிகை களான ஏஞ்சலினா ஜோலி, ரோஸ் மெக்கவுன், க்வெனித் பேல்ட்ரோ ஆகியோரும் ஹார்வி மீது பாலியல் புகார் அளித்தனர்.

தயாரிப் பாளர் ஹார்வி மீதான இந்த பாலியல் புகார்கள் ஹாலிவுட் உலகில் பெரும் பரப் பரப்பை ஏற் படுத்தி யுள்ளது.
இந்த நிலையில் ஹார்வி யால் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத் தல் குறித்து மெக்கோவன் ட்விட்டரில் பகிர்ந்தி ருந்தார். 

தொடர்ந்து அவர் பதிவு செய்த ட்வீட்களில் தனிப்பட்ட மொபைல் எண்ணைப் பகிர்ந்ததால், அது விதிமுறை மீறல் என அவரது கணக்கை ட்விட்டர் முடக்கியது.

இதனைத் தொடர்ந்து #Wome nBoycott Twitter என்ற ஹாஷ் டேக்கை மெக்கோவன் பயன்படுத்த அதனை ட்விட்டர் வாசிகளும் பதிவிட்டு ட்ரெண்ட் ஆக்கினர்.

ஹார்வி வெய்ன்ஸ் டீனால் பாலியல் துன்புறுத் தலுக்கு உள்ளான நடிகை களுக்கு ஆதரவு தெரிவி க்கும் வகையில் 

பெண்கள் அனை வரும் தங்க ளுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத் தல்களை ட்விட்டர் பதிவுகளாக யிட்டு #MeToo என்ற ஹாஸ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகி ன்றனர்.
ஆண்கள் பலரும் பெண் களின் இந்த பதிவு களுக்கு ஆதரவு தெரிவித் துள்ளன.

திமுக எம்.பி, கனிமொழி அவர்க ளும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் #MeToo என்ற ஹாஷ் டேக்கை பார்க்கும் போது 

ட்விட்டரில் சில பெண்கள் மட்டும் தான் பாலியல் துன்புறுத் தலுக்கு ஆளாக வில்லை என்பது தெரிகிறது என்று பதிவிட் டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings