ஊனமானாலும் ஊருக்கே மகிழ்ச்சி அளிக்கிறேன்... மாலா கதை !

0
மாட்டுக்கு தீனியாகக் கொடு க்கும் வைக்கோலை யும் கலை நயமிக்க பரிசுப் பொருளாக மாற்ற லாம் என ஆச்சரியப் படுத்து கிறார் சென்னையைச் சேர்ந்த மாலா. 

ஊனமானாலும் ஊருக்கே மகிழ்ச்சி அளிக்கிறேன்... மாலா கதை !
தனது மூன்று வயதில் போலியோ பாதிப்பி னால் நடக்க இயலாமல் போனாலும், தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் வாழ்க்கையை உற்சாக மாக வெற்றிப் பாதையில் செலுத்திக் கொண்டி ருக்கிறார்.
“எனக்கு அப்பா, அம்மா கிடையாது. என்னை வளர்த்தது பாட்டி தான். ஆறாவது வரைக்கும் தான் படிச்சேன். 

குடும்பச் சூழ்நிலை யால் தொடர்ந்து படிக்க முடியலை. அப்புறம், என்னை ஒரு ஹோம்ல சேர்த்து விட்டு ட்டாங்க. 

அங்கே 11 விதமான கைவினைப் பொருள்கள் செய்யக் கத்துக் கிட்டேன். 

நான் கத்துக்கிட்டு அங்கே இருக்கும் 100 பேருக்குச் கத்துக் கொடுக்க ணும்னு சொல்லித் தான் கத்துக் கொடுத்தாங்க. சம்பளமும் கொடுத் தாங்க. 
அதோடு, அங்கேயே தங்கி 50 பேருக்குச் சாப்பாடு செஞ்சு கொடுத்தேன். காலையில் நாலு மணிக்கு எழுந்து யோகா செய்துட்டு சமையலைக் கவனி ப்பேன். 
முதுமையில் தனிமை ஏன் வருகிறது ?
அப்புறம் 100 பேருக்கு கைவினைப் பொருள் பயிற்சி. ஆரம்பத்தில், ரொம்ப கஷ்டமா இருக்குனு என் பாட்டி யிடம் சொல்லி அழுவேன். 
 
அவங்க தைரியம் சொல்லி, ‘நீ வெளியே வரும் போது யாரையும் நம்பி இருக்கக் கூடாது. 

உன் சொந்த காலுக நிற்கணும் னு' சொன்னாங்க'' என்று சொல்லும் போதே மாலாவின் குரல் தழுதழுக் கிறது.

பதினைந்து வருடங்கள் அந்த விடுதியில் இருந்த மாலா, “வைக்கோ லில் இது வரை யாரும் செய்யாத விஷய த்தைச் செய்ய ணும்னு ஒரு ஐடியா வந்துச்சு. 

விடுதி வேலைகள் எல்லா த்தையும் முடிச்சுட்டு ராத்திரியில் உட்கார்ந்து செய்வேன். 

அந்த விடுதியை விட்டு வந்த போது வைக்கோலில் செய்த சாமி படங்கள், தலை வர்கள் படங்களை வெச்சி ருந்தேன். 

அதை எப்படி விற்கிறதுனு தெரியலை. அப்போது நடந்த கண்காட்சி ஒன்றில் எனக்கான அங்கீகார அட்டையைக் கொடுத்து, 
இங்கேயே கடை போட்டு கொள்ளும் வாய்ப்பு கிடைச்சுது. அப்பறம் இன்னும் தீவிரமா இதில் இறங் கினேன்” என்கிற மாலா புன்னகை யுடன் தொடர் கிறார்.
கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் !
“கண் காட்சிக்கு வரும் வி.ஐ.பி - க்கள், வைக்கோலில் செய்த படங் களைப் பார்த்து பாராட்டி வாங் கிட்டுப் போவாங்க. 

அவங் களின் நண்பர் களுக்கும் சொல் வாங்க. இதனால், எனக்கு போனிலும் ஆர்டர் வரும். 

என்கிட்டே விநாயகர் போட்டோ வாங்கிட்டுப் போன ஒருத்தர் கொஞ்ச நாளைக்கு அப்புறம் போன் பண்ணி, 

"நான் சொந்தமா ஒரு இடம் வாங்கிட் டேன்மா. எல்லாம் உன் கையால் போட்டோ வாங்கின ராசிதான்" னு சொன்னப்போ கண் கலங் கிட்டேன். 

போலியோ என்னை முடக்க நினைத் தாலும் நான் தயாரி க்கும் பரிசுப் பொருள் மூலம் இந்த ஊருக்கே மகிழ்ச் சியைப் பரப்புறேன். 

இப்போ, போட்டோஸ் மட்டு மில்லாமல், மேரேஜ் கார்டு செய்து கொடுக்க றேன். 
இந்தத் தொழிலில் இன்னும் பெரிய அளவுக்கு வரணும். என்னை மாதிரி இருக்கிற பலரு க்கும் கற்றுக் கொடுத்து 

அவங் களையும் சுய உழைப்பில் நிமிர்த் தணும்'' என்கிற மாலா, தனது சாதனை களுக்காக விருது களையும் குவித்து வருகிறார்.
சற்று முன் மும்பையில் நடந்த சம்பவம் !
“சிறந்த கைவினைப் பொருள் களுக்கான விருது, அன்னை தெரசா விருது, மகளிர் குழுக்கள் சேர்ந்து நடத்திய போட்டி யில் 

விருது, சிப்பி விருது, மகளிர் தின விருது, ரஜினிகாந்த் கையால் ஒரு விருது எனப் பல விருது களை வாங் கிட்டேன். 
என் பாட்டி சொன்ன மாதிரி சொந்தக் காலில் நிற்க ஆரம்பிச் சுட்டேன். உடல் குறையை நினைச்சு ஒடுங் கிடாமல், தைரியமா வெளியில் வரணும். 

அப்படி வந்தால் இந்த உலகம் நம்மை அரவணைச் சுக்க தயாரா இருக்கு” என்கிறார் நம்பிக்கை மிளிரும் குரலில்.

எதன் பொருட்டும் முடங் காமல் இயங்கிக் கொண்டி ருக்க விரும்பும் மாலா போன்ற பெண் களின் கனவுகள் வெல்லட்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)