தீபாவளி பட்டாசுகளை வெடிப்பது எப்படி?

0
இந்தியா முழுவதும் தீபாவளிக் கொண் டாட்டம் களை கட்டியிருக் கிறது. பட்டாசு வெடிக்கப் பல கெடு பிடிகள், 
தீபாவளி பட்டாசுகளை வெடிப்பது எப்படி?
பல விதி முறைகள் விதிக்கப்பட்ட போதும் பட்டாசுகள் அனைத்து இடங்களிலும் முழங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. 

இந்நிலை யில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தீ விபத் தின்றி தீபாவளியைக் கொண்டாட  அறிவுறுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தீபஒளித் திரு நாளான தீபாவளி இம்மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. 

இத்தீபாவளித் திரு நாளினை தீ விபத்தில்லாத் திருநாளாகக் கொண்டாட இத்துறை கீழ்காண் நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது. 

பள்ளிகள், பொது இடங்கள், குடிசைப் பகுதிகள் போன்ற இடங் களில் தீத்தடுப்புக் குழுக்கள் 
பாலக் பன்னீர் ரெசிபி செய்வது எப்படி?
மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் குழுக்களால் பட்டாசு மற்றும் தீப்பாது காப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப் பட்டுள்ளன. 
தீபாவளி பட்டாசுகளை வெடிப்பது எப்படி?
பொது மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற் படுத்தப் பிரசுரங்கள், போஸ்டர்கள் விநியோகம் செய்யப் பட்டுள்ளன.

உடனுக் குடன் தீவிபத்துக் களை அணைக்கும் நோக்கில், சென்னை மாநகரில் தீவிபத்து ஏற்படக் கூடிய 34 இடங்கள் கண்டறியப்பட்டு ஒரு நீர்தாங்கி வண்டிக் குழுவினருடன், 

குடிநீர் வாரியத் தண்ணீர் லாரியும் அக்டோபர் 16 முதல் 24 மணி நேரமும் நிலை நிறுத்தப் பட்டுள்ளது. 

மேற்காண் ஏற்பாட்டுடன் சென்னை மாநகரில் உள்ள 38 தீயணைப்பு நிலையங் களிலும் பணியா ளர்கள் ஊர்திக ளுடன் தயார் நிலையில் உள்ளனர். 

அனைத்துத் தீயணைப்பு ஊர்தி களும் வான்தந்தி வாயிலாகக் கட்டுப் பாட்டு அறை யுடன் இணைக் கப்பட்டு ள்ளது. இத்தீபாவளித் திருநாளினை விபத்தி ல்லாத் திரு நாளாகக் கொண்டாடப் பொது மக்கள் 

செய்யக் கூடியவை / செய்யக் கூடாதவை என்ன என்பதைப் பார்ப்போம்.
தீபாவளி பட்டாசுகளை வெடிப்பது எப்படி?
பட்டாசு களை முறை யாகத் தீ உரிமம் பெற்ற கடைக ளிலேயே வாங்க வேண்டும். பெரியவர் களின் மேற் பார்வை யில் குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். 

திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் பொழுது இறுக்க மான பருத்தி ஆடையை அணிய வேண்டும். பாதுகாப்பிற் காகக் காலணி மற்றும் கண்ணாடி அணிய வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் பொழுது ஒரு வாளி நீர் மற்றும் மணல் ஆகியவை பக்கத்தில் பாதுகாப்பிற்கு இருக் கட்டும். 

பட்டாசுப் பெட்டியில் கொடுக்கப் பட்டிருக்கும் விதிமுறைகளைக் கவனமாக படிக்க வேண்டும். 

ராக்கெட்டுகள் பற்றவைக்கும் பொழுது ஜன்னல் அல்லது கதவை நோக்கி அது செல்லாது என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

எரிந்து முடிந்த பட்டாசு, கம்பி மத்தாப்பு, ராக்கெட் ஆகிய வற்றைத் தண்ணீர் உள்ள வாளியிலோ அல்லது உலர்ந்த மண்ணிலோ போட வேண்டும். 
தீபாவளி பட்டாசுகளை வெடிப்பது எப்படி?
நீண்ட ஊது வர்த்தி களைக் கொண்டு பட்டாசு களை வெடியுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது முகத்தினைத் தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். 

ஆடையில் தீப்பற்றி னால் ஓடாதீர்கள். உடனே தண்ணீர் ஊற்றி அணை யுங்கள். நின்று கீழே படுத்து உருளுங்கள். 

பட்டாசு வெடிக்கும் பொழுது முதிய வர்கள், குழந்தைகள், பெண்கள், நோயா ளிகள் மற்றும் விலங்கு களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெரியவர் களின் மேற் பார்வை இல்லாமல் சிறுவர் களைப் பட்டாசு மற்றும் மத்தாப்புக் களைக் கொளுத்த அனுமதிக் காதீர்கள். 

வெடிக்காத பட்டாசு, மத்தாப்புகளை மீண்டும் வெடிக் காதீர்கள் வீட்டிற்கு அல்லது கட்டிடங் களுக்கு மிக அருகில் பட்டாசு களை வெடிக் காதீர்கள். 

பட்டாசுகள், ராக்கெட்டு கள், பூச்சட்டிகள் (புஸ்வானம்) ஆட்டம் பாம் போன்ற வற்றைக் கைகளில் வைத்து வெடிக் காதீர்கள். 

பட்டாசு களைக் காலை 06.00 மணிக்கு முன்னரும், இரவு 10.00 மணிக்குப் பின்னரும் வெடிக் காதீர்கள். பட்டாசு மற்றும் வெடிகளை வெடிக்கத் தீக்குச்சி களைப் பயன் படுத்தா தீர்கள். 

தீக்காயத்தில் ஒட்டியுள்ள ஆடையினை அகற்றாதீர்கள். தீக்காயத்தின் மீது எண்ணெய் மற்றும் இங்க் போன்ற வற்றினைக் கொட்ட வேண்டாம். 

தீபாவளி பட்டாசுகளை வெடிப்பது எப்படி?
பட்டாசு களை விற்பனை செய்யும் கடை களுக்கு அருகிலோ, முன்னரோ பட்டாசு வெடிக்கக் கூடாது. பெட்ரோல் பங்கு களுக்கு அருகில் பட்டாசு களை வெடிக்கக் கூடாது. 
மூடிய பெட்டிகளில் / பாட்டில் களில் பட்டாசுகளை உள்ளிட்டுக் கொளுத்தி வெடிக்காதீர்கள். கூட்டம் நிறைந்த தெருக்கள், சாலை களில் வெடிக்கா தீர்கள். 

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை யின் மகிழ்ச்சி யான மற்றும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தயவு செய்து இதை மற்றவர்களுக்கும் சேர் செய்யுங்கள்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings