பரபர வாழ்க்கை முறையில் நேரத்துக்கான மதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் துவைத்த உடன் துணியை அயர்ன் செய்ய உதவும் புதிய டிரையர் மெஷினுக்கு வரவேற்பு கூடி வருகிறது. 
துவைத்தவுடன் அயர்னிங் செய்யும் டிரையர் !

அமெரிக்காவின் டென்னசியில் உள்ள ஓக்ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் 


அமெரிக்க வாழ் இந்தியர் விரால் படேலின் பலே கண்டுபிடிப்பு தான் இந்த டிரையர் மெஷின். அப்படி என்ன தான் செய்கிறது இந்த டிரையர். 

வழக்கமாகத் துணி துவைக்கும் வாஷிங் மெஷினில், டிரையர் வசதி இருக்கும். அதில் மிக வேக  மான இயக்கம் மற்றும் சூட்டை ஏற்படுத்துவதன் மூலம் துணி களுக்கு இடையே உள்ள தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. 

அதை வெளியில் எடுத்து காய வைத்து சிறிது நேரத்துக்குப் பின்பே அயர்ன் செய்ய முடியும்.  இவர் வடிவமைத்துள்ள ‘அல்ட்ராசோனிக் டிரையர்’ மூலம் துவைத்த துணியை இதில் நேரடியாகப் பயன்படுத்தலாம். 

இதில் துணி களின் இழை களுக்கு இடையில் உள்ள தண்ணீர் உறிஞ்சப் படுகிறது. புதிய டிரையரில் வெப்பம் இல்லா மலேயே தண்ணீர் உறிஞ்சப் படுகிறது. 


வழக்க மான டிரையரில், சூட்டின் மூலம் தண்ணீர் ஆவியாக்கப் பட்டு வெளி யேற்றப் படுகிறது. இதில் துவைத்த துணியை டிரை செய்து உடனடியாக அயர்ன் செய்யலாம். 

வழக்கமான டிரையரைவிட 5 மடங்கு திறன் மேம்படுத்தப் பட்டதாம். துணியைத் துவைத்து, காய வைத்து அயர்ன் செய்வதற்கு ஆகும் நேரத்தில் பாதியை மிச்சப்படுத்துகிறது. 

மின்சார சிக்கனத்துக்கும் வழி வகுக்கிறது. இன்னும் இரண்டு முதல் 5 ஆண்டுகளில் இந்த டிரையர் விற்பனைக்கு வருமாம். 


காத்திருங்கள் துவைத்த துணியை உடனடியாக அயர்ன் செய்து உடுத்திக் கொள்ள என்கிறார் விரால் படேல்.