டிஸ்க் விலகலும் கழுத்து வலியும் தெரிந்து கொள்ள !

0
கழுத்து வலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப் பழக்க வழக்கம் 
டிஸ்க் விலகலும் கழுத்து வலியும் தெரிந்து கொள்ள !
மற்றும் நவீன வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிக நேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது, 
எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது. 

டிஸ்க் விலகல்

டிஸ்க் விலகல் என்பது கழுத்துப் பகுதியில் மற்றும் இடுப்பில் முதுகு தண்டு வடத்தில் எலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வு Intervertebral Disc என்றழைக்கப் படுகிறது. 

இது சில சமயம் பிதுங்கி வெளி வருவதுண்டு. இதனை Disc Prolapse என்கிறோம்.  டிஸ்க் விலகலை MRI Scan எடுத்து பார்ப்பதால் உறுதி செய்யலாம்.
கழுத்தில் சி2சி3, சி3சி4, சி4சி5, சி5சி6 போன்ற இடங்களில் டிஸ்க் விலக வாய்ப்புள்ளது. அப்படி ஏற்பட்டால் கழுத்தில் கடுமையான வலி மற்றும் திரும்ப சிரமம், வலி கழுத்தி லிருந்து கைகளுக்கு பரவும். 
சில சமயம் கை விரல்கள் மரத்தது போன்ற உணர்வும், படுக்கையில் படுக்கக் கூட சிரமத்தை ஏற்படுத்தும்.  

சில நேரங்களில் குனிந்து நிமிர்ந்தால் தலைசுற்றல் வரும். தலையின் பின்புறம் காதின் பக்கங்களில் வலி வரும். சில சமயம் முதுகின் பக்க வாட்டில் நெஞ்சுப் பகுதியில் குத்தல் போல வலி ஏற்படும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)