கேளிக்கை வரி குறைப்பு... தீபாவளிக்கு புதிய படம் !

0
தமிழ் நாட்டில் திரையரங்கக் கட்டணங்களை உயர்த்தவும் கேளிக்கை வரியை ரத்து செய்யவும் கோரி, 
கேளிக்கை வரி குறைப்பு... தீபாவளிக்கு புதிய படம் !
புதிய திரைப் படங்களை வெளியிடாமல் தயாரிப்பாளர்கள் போராடி வந்த நிலையில், கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைப் பதற்கு தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. 

கேளிக்கை வரி விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப் பாளர் சங்க தலைவ ரான நடிகர் விஷால், 

திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் கடந்த சில நாட் களாக அமைச்ச ர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.

அந்தப் பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இன்றும் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோருடன் 

விஷால், அபிராமி ராமநாதன், பிரகாஷ் ராஜ், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சு வார்த்தை யின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச் சாமியையும் இவர்கள் சந்தித்துப் பேசினார். 

இதற்குப் பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய விஷால், கேளிக்கை வரியை 10 சதவீதத் திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்க தமிழக அரசு ஒப்புக் கொண்டிரு ப்பதாகத் தெரிவித்தார்.

இதனால், தீபாவளி யன்று விஜய் நடித்த மெர்சல் உள்ளிட்ட படங்கள் வெளியாகு மெனவும் அவர் கூறினார்.
மேலும், திரையரங் குகளில் நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் 

அங்குள்ள உணவ கங்களில் நிர்ணயி க்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப் படாது என்றும் அவர் கூறினார்.

டிக்கெட்டு களை இணைய தளத்தில் பதிவு செய்யும் போது ஒரு டிக்கெட் டிற்கு 30 ரூபாய் வசூலிக்கப் படுவதை முறைப் படுத்தும் முயற்சிகள் துவங்கி யிருப்பதா கவும் விஷால் கூறினார்.

வாகன நிறுத்த கட்டணத்தைப் பொறுத்த வரை, வெளிப் படையாக கட்ட ணங்கள் அறிவிக்கப் பட்டு அதை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழ் நாட்டில் கடந்த பல ஆண்டு களாக திரைப் படக் கட்ட ணங்கள் உயர்த்தப் படாத நிலையில், அந்தக் கட்டண ங்களை 

உயர்த்த வேண்டு மென்றும் செப்டம்பர் மாத இறுதியிலிருந்து விதிக்கப் பட்ட கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டு மென்று 

கோரியும் அக்டோபர் ஆறாம் தேதி முதல் புதிய திரைப் படங்கள் ஏதும் வெளி யாகாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப் பாளர்கள் அறிவித் தனர்.
இதை யடுத்து, கடந்த வாரம் வெளியாக விருந்த 6 திரைப் படங்கள் நிறுத்தி வைக்கப் பட்டன. 

அதற்கு முந்தைய வாரம் வெளியான திரைப் படங்களே தற்போது எல்லா திரையரங் குகளிலும் ஒடிக் கொண்டிரு க்கின்றன.

இந்த நிலையில், அக்டோபர் 7ஆம் தேதி யன்று திரைய ரங்கக் கட்டண ங்களை அதிக ரித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி யளித்து உத்தர விட்டது.

அதன்படி சென்னைப் பெருநகரப் பகுதியில் உள்ள உணவக ங்களுடன் கூடிய மல்ட்டி ப்ளக்ஸ் மற்றும் ஏசி திரைய ரங்குக ளில் 

அதிக பட்சமாக 150 ரூபாயும் குறைந்த பட்சமாக 15 ரூபாயும் இருக்க வேண்டும் என்றும் கூறப் பட்டது. 

சாதாரண மல்டிப்ளெக்ஸ் திரையரங் குகளில் அதிக பட்சமாக 118.80 ரூபாயும் குறைந்த பட்சமாக 15 ரூபாயும் இருக்க வேண்டு மென்றும் அதை விட சில வசதிகள் குறை வான மல்டிப் ளெக்ஸ் திரையரங் குகளில் 
அதிக பட்சமாக 106.30 ரூபாயும் குறைந்த பட்சம் 15 ரூபாயும் கட்டணம் இருக்க லாம் என்றும் அரசு தெரிவி த்தது.

அதே சமயம், முனிசிபல் கழகங் களில் அதிக பட்சமாக 62.5 ரூபாயும் குறைந்த பட்சமாக பதினைந்து ரூபாயும் முனிசி பாலிடி களில் அதிக பட்சமாக 50 ரூபாயும் குறைந்த பட்சமாக 10 ரூபாயும் கட்டண மாக நிர்ணயிக் கப்பட்டு ள்ளது. 

கிராமப் பஞ்சாயத் துகளில் அதிக பட்சமாக 18.75 ரூபாயும் குறைந்த பட்சமாக 10 ரூபாயும் கட்டண மாக நிர்ணயி க்கப்பட் டுள்ளது.

இந்தக் கட்டண உயர்வால் சென்னை நகரில் உள்ள மல்டிப் ளெக்ஸ்களில் ஜிஎஸ்டியுடன் சேர்த்து டிக்கெட் கட்டணம் 192 ரூபாயாக இருக்கும் என எதிர் பார்க்கப் பட்டது. 

அதே போல, சென்னை யில் 150 ரூபாயை அதிக பட்ச கட்டணமாக அனுமதி த்திருக்கும் அரசு, முனிசிபல் கழகப் பகுதிகளில் 

அதே வசதிகளைக் கொண்ட திரையரங்குகளில் 62.5 ரூபாயை மட்டுமே உயர்ந்தபட்ச கட்டணமாக இருக்க வேண்டும் 
என்று கூறியது, திரை யரங்க உரிமையாளர்களிடம் பெரும் அதிருப் தியை எற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று விஷா லுடன் சென்று பேச்சு வார்த்தை நடத்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், 

விஷால் சென்ற பிறகு அதே இடத்தில் செய்தி யாளர் களைச் சந்தித்தார். அரசு நிர்ணயித் திருக்கும் அதிகபட்ச கட்டணம் திருப்திய ளிக்கிறது. 

ஏற்கனவே இருந்த கட்டணம் மிகக் குறைவாக இருந்த தால் திரையரங்க உரிமை யாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலி த்தனர். 

இனி அந்தப் பிரச்சனை இருக்காது. ஒவ்வொரு பகுதியி லும் ரசிகர் களின் வாங்கும் திறனைப் பொறுத்து கட்ட ணங்களை திரை யரங்க உரிமை யாளர்கள் முடிவு செய் வார்கள் என்று அபிராமி ராம நாதன் கூறினார்.

திரையரங் கங்களில் உள்ள உணவகங்களில் அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதலாக விற்கக் கூடாது என விஷால் கூறியிருப்பது குறித்துக் கேட்ட போது, விஷாலைப் பற்றிச் சொல் வதற்கு எங்களு க்கும் நிறைய இருக்கிறது. 
நாங்கள் கூடுத லான விலை க்குப் பொருட் களை விற்க மாட்டோம். அப்படி விற்றால் அரசே நடவடிக்கை எடுக்கலாம். 

வெளியில் ஒரு விலையும் திரையர ங்கிற்குள் ஒரு விலை யும் இருக்காது" என்றும் கூறினார். 

குறுக் கிட்டுப் பேசிய திரைப்பட விநியோ கஸ்தர் கூட்ட மைப்பு தலைவர் செல்வின், நடிகர்கள் தங்கள் ஊதிய த்தைக் குறைப்பது தான் 

இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்று தெரி வித்தார். தமிழக அரசுடனான பேச்சு வார்த்தை முடிவடைந் திருக்கும் நிலை யில், 

விரை விலேயே புதிய திரையரங்கக் கட்டண ங்களை திரைப்பட உரிமை யாளர்கள் அறிவிப் பார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது.
இந்த விவகார த்தின் காரண மாக இரண்டாவது வாரமாக இந்த வாரமும் புதிய படங்கள் வெளி யாகாததால், 

முன்பே வெளியாகி ஓடி முடித்த தரமணி போன்ற படங்களை திரை யரங்க உரிமை யாளர்கள் இன்று மீண்டும் திரை யிட்டுள் ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings