ஆப்பிளில் புள்ளி இருப்பது எதனால? - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

ஆப்பிளில் புள்ளி இருப்பது எதனால?

தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை உள் வாங்கி நமக்கு சுவாசிக்க ஆக்சிஜனை தருகிறது என்பது உங்கள் அனைவ ருக்கும் தெரிந்ததே. 

சரி, நமக்கு மூக்கு இருக் கிறது அதனால் காற்றை உள்வாங்கி வெளியிடு கிறோம். ஆனால் தாவர ங்கள் எந்த வழியாக சுவாசிக் கிறது?
இந்தக் கேள்வி அனைவ ருக்கும் இருக் கிறது. அங்கு தான் இந்த லென்டி செல்ஸ் வருகிறது. 

இவைகள் தான் அனைத்துத் தாவரங் களுக்கும் மூக்கு போல் செயல் பட்டு கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சு கிறது. 

நமக்கு நல்ல காற்று தேவைப் படுவதைப் போல தாவரங் களுக்கும் நல்ல கார்பன் டை ஆக்ஸைடு தேவை. ஆப்பிள் 
மற்றும் அவகோடா பழங்களில் பார்த்தி ருப்பீர்கள். குட்டிக் குட்டிப் புள்ளிகள் இருக்கும். 
இப்படி அழகான பழங் களில் ஏன் இப்படி புள்ளி போன்ற அமைப்பு இருக் கிறது என்று அனைவ ருக்கும் கேட்கத் தோன்றும். 

காரணமி ல்லாமல் இல்லை .நமக்கு மூக்கு போல செயல் படும் அமைப்பு தான் இது. கண்ணு க்குத் தெரியாத மிக நுண்ணிய துளைகள் இதில் இருக்கிறது. 

இவைகள் மூலம் சுவாசிப் பதால் அந்த இடம் ஒரு புள்ளி போல தோன்று கிறது. நமக்கு எப்படி சுவாசக் கோளாறு இருக் கிறதோ.. 
அதே போல ஆப்பிள் களுக்கும் இருக் கிறது. அப்படிப் பட்ட கோளாறு தான் சில ஆப்பிள் களை வெட்டும் போது இளகிய காக்கி நிறத்தில் அந்தப் பகுதி மாறு கிறது. 
அதனால் தான் அந்த ஆப்பிள் கெட்டு விட்டது என்று நாம் துாக்கி எறிகி றோம். வெளிப் பார்வைக்கு பார்ப்ப தற்கு கெட்டுப் போனது போல் தெரிந் தாலும் 

உள்ளே நன்றாக இருக்கும் பல பழங் களைப் பார்த்திரு ப்பீர்கள். இதற்குக் காரணம் மேல் தோல் லென்டில் சில் மட்டுமே கெட்டுப் போயி ருப்பதே ஆகும்.