மாதவிடாயை ஆசிரியை கேலி செய்ததால் மாணவி தற்கொலை?

பாளயங் கோட்டையில் வசிக்கும் சையது அகமது - ரசவம்மாள் பானு தம்பதி யின் 12 வயது மகள், செந்தில் நகரில் உள்ள ஜோசப் மெட்ரிக் குலேஷன் பள்ளியில் 7-ஆம் வகுப்புப் படித்து வந்தார்.
மாதவிடாயை ஆசிரியை கேலி செய்ததால் மாணவி தற்கொலை?
இவர் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி அதிகாலை இரண்டு மணி யளவில் தனது வீட்டி ற்கு அருகில் உள்ள கட்டட த்திலி ருந்து கீழே குதித்தார். 

மருத்து வமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அந்தச் சிறுமி உயிரி ழந்தார்.

12 வயதுக் குழந்தை இதை எப்படித் தாங்கும்?

தற்கொலை செய்து கொள்வ தற்கு முன்பாக அந்த மாணவி எழுதிய கடித த்தில், எனக்கு வேறு வழி தெரிய வில்லை. செத்துத் தான் ஆகனும். நான் ஆறாம் வகுப்புப் படிக்கும் போது என் மீது எந்தப் புகாரா வது வந்ததா? 

ஆனால், ஏழாம் வகுப்புப் படிக்கும் போது என் மிஸ் ஏன் இப்படி புகார் சொல் கிறார்கள்? நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் இப்படி பாடாய் படுத்து கிறார்கள்? 

அந்த மிஸ் நல்லா இருக்க மாட்டாங்க. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது. 
இது குறித்து பேசிய ரசவம்மாள், இந்த ஆசிரியை பல நாட்களாகவே என் குழந் தையை துன்புறுத்தி வந்திருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இந்தக் குழந்தை வயதுக்கு வந்தது. 

அதற்காக ஒரு வாரம் பள்ளிக் கூடத்தில் சொல்லி விட்டுத் தான் விடுமுறை எடுத்தோம். 

பள்ளிக் கூடத்திற்கு குழந்தை திரும்பிச் செல்லும் போது, ஏன் வீட்டுப் பாடம் செய்யவில்லை யெனக் கேட்டு அடித்தி ருக்கிறார்கள் என்றார்.

மேலும், கடந்த சனிக்கிழமை பள்ளிக் கூடத்திற்குப் போன வுடன் மூன்றாவது முறையாக என் மகளுக்கு மாதவிடாய் வந்திருக்கிறது. 

இது குறித்து ஆசிரியையிடம் சொன்னவுடன், வகுப்பு மாணவர்கள் முன் பாகவே ஒரு குச்சியால் சுடிதாரைத் தூக்கிப் பார்த்திருக்கிறார். 

மேலும் கரும்பலகையைத் துடைக்கும் துணியைக் கொடுத்து பயன் படுத்திக் கொள்ளச் சொல்லி யிருக்கிறார். 

மேலும் வகுப்புக்கு வெளியேயே நிற்க வைத்திருக்கிறார். 12 வயதுக் குழந்தை இதை எப்படித் தாங்கும்? என்கிறார் ரசவம்மாள்.
வீட்டில் பெற்றோரிடம் இது குறித்து சொன்ன அந்த மாணவி, ஞாயிற்றுக் கிழமை அருகிலிருந்த கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி யின் பள்ளி என்ன கூறுகிறது?

தனியார் பள்ளிக் கூடமான ஜோசப் மெட்ரி குலேஷன் பள்ளியில் 3ஆம் வகுப்பு முதலே ஆங்கில வழிப்பிரிவில் இந்த மாணவி படித்து வந்துள்ளார். 

மாணவியின் தந்தை சையது அகமது ஆட்டோ ஓட்டு னராக வேலை பார்த்து வருகிறார். 

இது குறித்து ஜோசப் மெட்ரிக்கு லேஷன் பள்ளி யின் தலைமை ஆசிரியை கலாவதியிடம் கேட்ட போது, காவல் துறை விசாரி த்தது. 

மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்தார்கள். அவர் களிடம் எல்லா வற்றையும் சொல்லி  விட்டோம். அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. 

ஆசிரியை திட்டியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். இது தொடர் பாக மாவட்ட வரு வாய்த் துறை அதிகாரி பள்ளிக் கூடத்தி லும் வகுப்பில் இருந்த 16 மாணவர் களிடமும் விசாரணை நடத்தி யுள்ளார். 
விரைவில் அந்த அறிக்கை மாவட்ட நிர்வா கத்திடம் ஒப்படைக்கப் படவுள்ளது. இன்று திரு நெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஆணையர் கபில் சரத்கர், 

இந்த விவ காரத்தில் தற்கொலை என்று மட்டும் வழக்குப் பதிவு செய்யப் பட்டு, மாணவியின் கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், மாதவிடாய் குறித்த ஆசிரியர் திட்டியதாக கூறப்படும் தகவலை உறுதிப் படுத்த முடியவில்லை யென்றும் அவர் கூறினார்.
Tags:
Privacy and cookie settings