ஃபைப்ராய்டை தடுக்க எளிய வழி !

ஃபைப்ராய்டு என்கிற சிறிய கட்டி ஒரு பெண்ணின் உடலில் ஏற்படு த்துகிற பூகம் பங்கள் மிகப் பெரியது. 
ஃபைப்ராய்டை தடுக்க எளிய வழி !
தம்மாத் தூண்டு கட்டிக்கு ஓர் உயிர் உருவா வதையே தடுத்து நிறுத்து கிற அளவுக்கு அத்தனை சக்தியா

என்கிற ஆச்சரியம் மேலிடுவது இயல்பே. ஃபைப்ராய்டு பிரச்னை, குழந்தை யின்மைக்கு எப்படிக் காரணமாகிறது? அதை அறிந்து கொள்வது எப்படி? சிகிச்சைகள் உண்டா? தவிர்க்க முடியுமா?

எல்லா சந்தேகங் களையும் தெளிவுப் படுத்துகிறார் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர்லோ கநாயகி. 

Submucosal fibroids வகையி லான ஃபைப்ராய்டு, கருவானது பதிந்து, வளர் வதைத் தடுக்கக் கூடியது.
பெண்கள் வெள்ளி நகை அணிவது எதற்காக....!
எனவே, இந்த வகைக் கட்டிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், கருத்தரிப்பதற்கு முன்பே இவற்றை அகற்ற மருத்துவர்கள் அறிவுறு த்துவார்கள்.

மிக அரிதாக இந்தக் கட்டிகள், சினைக் குழாய் களையும் பாதிக்க லாம். சில வகை ஃபைப்ராய்டு கட்டிகள், கர்ப்பப் பையின் அளவு மற்றும் வடிவ த்தையே மாற்றக் கூடியவை.
கருப்பை யினுள், கருப்பை சுவரை ஒட்டி வளர்ந்து, கருத்த ரிப்பை பாதிக்கக் கூடியவை.  

Subserosal வகை ஃபைப்ராய்டு கட்டிகள் கருத்தரி த்தலைப் பாதிப்ப தில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஃபைப்ராய்டு கட்டி களை அகற்றிய பிறகு கருத்த ரிக்கும் வாய்ப்பு அதிக ரிக்கும். 

கர்ப்பத் துடன் வளரும் ஃபைப்ராய்டு... 

அரிதாக சில பெண் களுக்கு ஃபைப்ராய்டு இருக்கும் போதே கர்ப்பமும் தரிப்ப துண்டு. கருவுடன் அந்தக் கட்டியும் சேர்ந்து வளரும்.

பெரும் பாலும் இது கர்ப்பிணி களுக்குப் பிரச்னை களைக் கொடுப்ப தில்லை என்றாலும் சிலருக்கு கரு கலையவும் குறைப் பிரசவம் நிகழவும் காரண மாக அமைவ துண்டு. 

பெரிய அளவிலான கட்டிகள், பிரச்னைக் குரியவை. அது பிரசவத்துக்குப் பிறகான அதீத ரத்தப் போக்குக்குக் காரணமாகலாம். 
பிரசவத்தை சிக்கலாக்கி, சுகப்பிரசவம் சாத்திய மாகாமல், சிசேரியனுக்கு வழி வகுக்கலாம். 
கர்ப்பப் பையின் உள்ளே உள்ள ஃபைப்ராய்டின் வளர்ச்சி யானது கருவில் உள்ள குழந்தையின் நிலையையே பாதிக்கலாம். பெரும் பாலும் கர்ப்ப காலத்தில் இதற் கான சிகிச்சை கள் மேற் கொள்ளப் படுவ தில்லை.

எப்படி கண்டு பிடிப்பது?

கைதேர்ந்த மகப்பேறு மருத்துவரால் வழக்கமான வயிற்றுப் பரிசோத னையிலேயே அதைக் கண்டு பிடித்துவிட முடியும்.

இடுப்புப் பகுதியில் உறுதியான அசாதாரணமான திரட்சி இருப்பதையும் மருத்துவரால் மட்டுமே கண்டு பிடிக்க முடியும். 
ஃபைப்ராய்டை தடுக்க எளிய வழி !
தேவைப்பட்டால் எக்ஸ்ரே, அடிவழியே செய்யப்படுகிற டிரான்ஸ் ெவஜைனல் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஹிஸ்டெ ரோஸ்கோப்பி போன்ற வையும் பரிந்துரைக்கப் படும்.

தீர்வுகள்...

மாத விலக்கின் போது கடுமையான வலியோ, அதீத ரத்தப்போக்கோ இருந்தால் அதை அலட்சியப் படுத்தக் கூடாது. உடனடி யாக மருத்து வரைப் பார்த்து ஃபைப்ராய்டு சோ தனையை மேற் கொள்ள வேண்டும். 

பெரும் பாலான பெண்கள் ஆரம்பத் திலேயே வராமல், வயிறு பெருத்து, தொப்பை விழுந்த மாதிரி தோற்றம் வந்த பிறகு, அதற்கான காரணம் அறிய வேண்டி தான் மருத்துவரை சந்திக்கி றார்கள்.
ஸ்கிப்பிங்‬ செய்தால் ஏற்படும் நன்மை !
மற்ற அறிகுறி களைக் கேட்டு, சோதனை செய்கிற போது, அவர்களது ஃபைப்ராய்டு கட்டி பெரிதாக வளர்ந் திருக்கும்.
4 அல்லது 5 செ.மீ. அள வுள்ள கட்டிகள் என்றால் லேப்ராஸ் கோப்பி சிகிச்சை மூலமே சரி செய்து விடலாம். அதன் மூலம் கர்ப்பப் பையையும் பாது காக்கலாம். 

அதுவே கட்டி வளர்ந்து பெரி தாகி விட்டால் (சில பெண் களுக்கு 15 செ.மீ. அளவுக்குக் கூட வளர் வதைப் பார்க்க லாம்) சிகிச்சை யளிப்பது சிரமம்.

கர்ப்பப் பையும் பாதிக்கப் படும். இந்தப் பிரச்னையை குணப் படுத்த மருந்துகள் கிடை யாது. GnRH analogues என்கிற ஓர் ஊசி போடப் படும். அதை மாதம் ஒரு முறை என 3 மாதங்க ளுக்குப் போட வேண்டும்.

அதுவும் கட்டியைக் கரைக் காது. தற்காலி கமாகச் சுருக்கும். மறுபடி கட்டி வளரும். அதனால், அறி குறிகளை உணர்ந்து சீக்கிரமே சோதித்து, எளிய சிகிச் சையில் சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

கட்டியின் அளவைப் பொறுத்து மருத்துவர் சிகிச்சைகளைப் பரிந்து ரைப்பார். 

அதாவது, அந்தப் பெண்ணின் ஒட்டு மொத்த ஆரோக்கியம், ஃபைப்ராய்டு உருவாக்கிய பிரச்னை களின் தீவிரம், சிகிச்சை

மற்றும் அதன் பக்க விளைவு களைத் தாங்கும் சக்தி, குழந்தை பெறுவதில் உள்ள ஆர்வம் போன்ற வற்றைப் பொறுத்தே சிகிச் சைகள் அமையும்.
பொதுவான சிகிச்சைகள்

Uterine Artery Embolization (UAE) இந்த முறையில் ஃபைப்ராய்டு களுக்கு ரத்தம் செலுத்தும் தமனிகள் கண்டு பிடிக்கப் பட்டு தடை செய்யப்படும்.

ரத்த ஓட்டம் தடை படுவதால் கட்டிகள் சுருங்கும். சிகிச்சைக்குப் பிறகும் திரும் பவும் கட்டிகள் வளர்கி ன்றனவா என்பதை அடிக்கடி சரி பார்க்கப் பட வேண்டும்.
Myomectomy இது கர்ப்பப் பையை காக்கும் சிகிச்சை. ஃபைப்ராய்டு கட்டியை மட்டும் அகற்றி விட்டு, கர்ப்பப் பையை அப்படியே விட்டு விடுவார்கள். 

குழந்தை இல்லாத பெண்களுக்குப் பரிந்துரைக்கப் படுவது. எம்.ஆர்.ஐ. துணையுடன் செய்யப்படுகிற அல்ட்ரா சவுண்டு குழந்தைப் பிறப்பை முடித்தவர் களுக்குப்

பரிந்து ரைக்கப்படுகிற இந்த சிகிச்சையில், அல்ட்ரா சவுண்டு அலைகள் வெப்பமாக மாற்றப்பட்டு, அதன் மூலம் கட்டிகள் அழிக்கப் படும். 

அல்ட்ரா சவுண்டு வசதி செய்யப்பட்ட எம்.ஆர்.ஐ. மெஷினுள் சம்பந்தப்பட்ட பெண்ணை இருக்கச் செய்து, மயக்கம் அளித்து சிகிச்சை அளிக்கப்படும்.
Hysterectomy இதில் கர்ப்பப்பை முழுவதுமாக நீக்கப்படும். இது பெரும் பாலும் குழந்தை பெற்றவர் களுக்கும் அந்த வயதைக் கடந்தவர் களுக்கும் பரிந்துரைக்கப் படுவது. 

கர்ப்பப் பையே நீக்கப் படுவதால் அதன் பிறகு குழந்தை பெறும் வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போகும் என்பதால் குழந்தை இல்லாத வர்களுக்கு இது அறிவுறுத்தப் படுவதில்லை. 

மற்ற சிகிச்ைசகளில் தீர்வு கிடைக்காதவர் களுக்கு வேறு வழியே இல்லாத நிலையில் தான் இதை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

இத்தனைக்கும் பிறகு ஃபைப்ராய்டு கட்டிகள் மட்டும் கபாலி’ ஸ்டைலில் `நான் வந்துட்டேன்னு சொல்லு....

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என வந்து பாடாகப் படுத்தும். வருவதற்கு முன்பும், வந்து விட்டுப் போன பிறகும் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
ஃபைப்ராய்டை தடுக்க எளிய வழி !
எடையை கட்டுப் பாட்டுக் குள் வைத் திருப்பது பல பிரச்னைகளையும் அண்ட விடாமல் காப்பது போலவே ஃபைப்ராய்டையும்

பக்கத்தில் விடாமல் பாதுகாக்கும். எடை அதிகரிக்கும் போது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவும் அதிகரி ப்பதால் ஃபைப்ராய்டு கட்டியின் வளர்ச்சியும் தூண்டப்படும்.

உடலுழைப்பே இல்லாத வாழ்க்கை முறை ஆபத்தானது. தினமும் ஏதோ ஓர் உடற் பயிற்சியை தவறாமல் மேற்கொள்வதும் ஃபைப்ராய்டில் இருந்து விலகி இருக்க உதவும்.

வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வதும் இந்த விஷயத்தில் முக்கியம். காலை மற்றும் மாலை வெயில்படும் படி நடப்பதோ,
சீயக்காயை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் !
உடற்பயிற்சி செய்வதோ, வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படாமல் காத்து, ஃபைப்ராய்டு ஆபத்தையும் குறைப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மாதவிலக்கின் போது கடுமையான வலியோ, அதீத ரத்தப் போக்கோ இருந்தால் அதை அலட்சியப் படுத்தக் கூடாது.

ஃபைப்ராய்டு கட்டிகள் `கபாலி’ ஸ்டைலில் `நான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என வந்து பாடாகப் படுத்தும்.
Tags: