எலியனாக மாறிய மனிதர்... அதிர்ச்சியான உண்மை !

அமெரிக்காவில் ஏலியனாக மாறுவதற்காக வாலிபர் ஒருவர் 110 அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் Vinny Ohh(22) என்பவர் தான் இந்த தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். மேக்-அப் நிபுண ரான இவருக்கு 15 வயது முதல் பாலியல் உறவில் விருப்ப மில்லை.

இதனால் ஆணாக இருந்து பெண்ணாக மாறுவதை விட ஏலியனாக மாறுவது சிறந்தது என முடிவு செய்து மருத்து வர்களை சந்தித்து வந்துள்ளார். 

இதன் தொடர்ச்சியாக 17 வயது முதல் பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற் கொண்டு வந்துள்ளார். உடலில் இரு க்கும் ஒவ்வொரு உறுப்பையும் இவர் மாற்றி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். 

தற்போது வரை சுமார் 50,000 டொலர் வரை இந்த சிகிச்சை களுக்கு செலவிட் டுள்ளார். இன்னும் சில மாதங்களில் ஆணுறுப்பு, மார்புக் காம்புகள், தொப்புள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்க முடிவு செய்துள்ளார். 
இதற்காக அவர் 1,60,000 டொலர் நிதியை திரட்டி வருகிறார். இது குறித்து வாலிபர் பேசிய போது, ‘பாலியல் உணர்வுகள் இல்லாமல் என்னால் வாழ முடியும் என்ற போது 

அதற்கு தேவையான உறுப்புகளை மட்டும் ஏன் வைத்திருக்க வேண்டும்?. கூடிய விரைவில் இந்த உலகத்தில் ஒரு புதிய உயிரினமாகவே தன்னை மாற்றிக் கொண்டு ஏலியனாக மக்கள் மத்தியில் வலம் வருவேன்’ என Vinny Ohh கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings