கவர்ச்சியான அரசியல்வாதி செயல் !

ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் கருத்தாக்கம் கொண்ட காலுறை அணிந்து கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரை கனேடிய பிரதமர் சந்தித்துள்ளது பரவலாக பேசப்படுகிறது.
கவர்ச்சியான அரசியல்வாதி செயல் !
உலகின் மிகவும் கவர்ச்சியான அரசியல் வாதிகளில் ஒருவர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. 

குத்துச் சண்டை வீரரான ட்ரூடோ கனேடிய பிரதமராக ஆட்சிக்கு வந்ததில் இருந்து துணிச்சலாக பல விடயங்களையும் முன்னெடுத்து வருகிறார்.

எஞ்சிய அரசியல் வாதிகள் கலந்து கொள்ள தயங்கும் அல்லது புறக்கணிக்கும் LGBT பேரணிகளுக்கு பிரதமர் ட்ரூடோ துணிச்சலாக கலந்து கொண்டு அவர்களின் வானவில் காலுறையை அணித்து சென்று அவர்களை ஊக்கு வித்துள்ளார்.
கவர்ச்சியான அரசியல்வாதி செயல் !
இந்த நிலையில் அமெரிக்கா வில் உள்ள நியூயார்க் நகரில் சர்வதேச நாணய நிதியத் தின் தலை வரான Christine Lagarde உடனான சந்திப்பின் போது

பிரபல திரைப்படமான ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் சிவப்பு காலுறை அணிந்து சென்றுள்ளது தற்போது அவரது ஆதரவாளர் களிடையே பெருமை யாக பேசப்படுகிறது.
கவர்ச்சியான அரசியல்வாதி செயல் !
கனேடிய பிரதமரின் இது போன்ற செயல் முதன் முறையல்ல. அயர்லாந்தில் சென்ற போது அவர்களது பாரம்பரிய சின்னமாக கடமான் பொறித்த காலுறை அணிந்து சென்றார். 

மட்டுமின்றி கடந்த மே மாதம் இரண்டு காலிலும் இருவேறு காலுறை அணிந்து சென்று தலைப்புச் செய்தியாகவும் மாறினார் ஜஸ்டின் ட்ரூடோ.
Tags:
Privacy and cookie settings