டெல்லி ரயில் நிலையம் பாதுகாப்பானதல்ல... பரபரப்பு !

இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் தம்மை ஒரு மர்ம நபர் பிந்தொடர்ந்ததாக இளம் பெண் ஒருவர் பகிர்ந்த டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி யுள்ளது.
டெல்லி ரயில் நிலையம் பாதுகாப்பானதல்ல... பரபரப்பு !
டெல்லியில் அமைந்துள்ள பிட்ஸ் பிலானி கல்லூரியில் படிக்கும் மேகா என்ற பெண் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் தன்னை ஒரு மர்ம நபர் பின் தொடர்ந்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், பெண்களே, மெட்ரோ ரயில் அத்தனை பாதுகாப்பாக இல்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவருடைய டுவிட்டர் பதிவில், பெண்களே, எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களும் அத்தனை பாதுகாப் பானதாக இல்லை. 

நான் கோல்ப் கோர்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் எனது அப்பா வருவதற் காக காத்துக் கொண்டி ருந்தேன். அப்போது நான், போனில் எனது வீட்டில் இருப்பவர் களிடம் பேசிக் கொண்டி ருந்தேன். 

எனது அருகி லிருந்த ஒருவன் நான் பேசுவதை ஒட்டுக் கேட்டான். எனவே நான் ஹெட்போன் போட்டு அமைதி யாக பேசினேன். 

அவன் என்னைச் சுற்றி வந்ததைத் தொடர்ந்து நான் அங்கிருந்து நகரத் தொடங்கினேன். அவனும் என்னை பின் தொடர்ந் தான். நான் நிற்கும் பொழுது அவனும் நின்றான். 
என்னை பின் தொடர்ந்த அவன், என்னை தள்ளி விட பார்த்தான். நான் அவனை தள்ளி விட்டு அவனை அடித்தேன். நான் அவனை கீழே தள்ளி விட்டு குரல் எழுப்பி னேன். ஆனால் உதவிக்கு யாரும் வரவில்லை. 

கண் காணிப் பாளர் வேறு யாருடனோ பேசிக் கொண்டி ருந்தார் என்று பதிவிட் டுள்ளார். அவருடைய பதிவு சமூக வலை தளத்தில் வைரலாகி யுள்ளது. மேலும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சை யையும் கிளப்பி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings