வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு... கேமராவில் சிக்கிய திருடன் !

சாந்தோமில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகையை திருடிய ஆசாமி கண்காணிப்பு கேமரா வில் சிக்கினார். கேமரா பதிவுகளை வைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு... கேமராவில் சிக்கிய திருடன் !

சென்னை சாந்தோம் முத்து தெருவில் வசிப்பவர் மெட்டி (50). இவர் கணவர் வங்கி ஊழியர். அவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட வீட்டில் தனியாக வசித்து வருகிறார். 

நேற்று மதியம் மெட்டி வீட்டை பூட்டி விட்டு மாலை 5 மணி அளவில் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு இருப் பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து

உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே இருந்த 50 சவரன் நகை திருடப் பட்டது தெரிய வந்தது. மெட்டி வீட்டில் இல்லாத சந்தர்ப் பத்தை பயன் படுத்திக் கொண்டு வீட்டின் பூட்டை உடைத்து திருடி யுள்ளனர். 

இது பற்றி மெட்டி மைலாப்பூர் காவல் நிலைய த்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்து க்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

திருட்டு நடந்த வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு நிறுவன த்தில் கண் காணிப்புக் கேமரா இருப்பதை பார்த்த போலீஸார் கண் காணிப்புக் கேமரா பதிவு களை எடுத்து ஆராய் ந்தனர். 

அதில் மெட்டி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சிறிது நேரத்தில் அங்கு வரும் ஒரு நபர் மெட்டியின் வீட்டை நோட்ட மிட்டு வெளிப்புற சுவரை ஏறி குதித்து 

உள்ளே செல்வதும் பின்னர் பத்தே நிமிட த்தில் ஒரு பையுடன் மீண்டும் அதே போன்று சுவரேறி குதித்து வெளியே செல்வதும் பதிவாகி இருந்தது.

ஜீன்ஸ் பேன்ட்டும், டி ஷர்ட்டும் அணிந் திருந்த நபர் நடந்தே வந்து திருடி விட்டு பொறுமையாக சாந்தோம் நோக்கி நடந்து செல்கிறார். அவரது அங்க அடையாளங்களை வைத்து போலீ ஸார் அவரைத் தேடி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings