தானியங்கி சிக்னல்கள், அதிநவீன கேமராக்கள்... சென்னை போலீஸ் !

சென்னையில் 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து பகுதிகளிலும் தானியங்கி சிக்னல்களை அமைக்க போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
தானியங்கி சிக்னல்கள், அதிநவீன கேமராக்கள்... சென்னை போலீஸ் !
விதி மீறல் வாகனங்களை அடையாளம் காண முக்கிய சாலைகளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்து களில் 16,092 பேர் பலியாகி யுள்ளனர். 

இதில் சென்னையில் மட்டும் 1,155 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந் துள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னையில் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வ நாதன், 

போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி வாகன சோதனை தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. 

குறிப்பாக சென்னை காவல் மேற்கு மாவட்டமான அண்ணா நகர், அம்பத்தூர், புளியந்தோப்பு பகுதிகளில் மட்டும் இந்த ஆண்டில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விதிகளை 
மீறியதாக 581 வாகன ஓட்டுநர் களின் உரிமம் 6 மாதத்துக்கு தற்காலி கமாக ரத்து செய்யப் பட்டு ள்ளது. 

2 நாட்களுக்கு முன்பு, ஒரே நாளில் விதி முறைகளை மீறியதாக 11 ஆயிரம் வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதியப் பட்டுள்ளன.
Tags:
Privacy and cookie settings