நீங்கள் பார்க்கும் வேலை சரியானதா?

அனைவருமே ஏதோ ஒரு வேலையில் தங்களை நிலை நிறுத்தி, தன்னை பொருளாதார ரீதியாக ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். 
நீங்கள் பார்க்கும் வேலை சரியானதா?
அதே சமயம் நாம் செய்யும் வேலை நமக்கு ஒரு திருப்தியைத் தர வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் சரியான வேலையில் தான் உங்களை இணைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்பதை இந்த மூன்று கேள்விகள் உங்களுக்கு விளக்கும்.

நீங்கள் சவாலுக்கு தயாரா?

உங்களுக்குத் தரப்பட்டுள்ள வேலையில் 60-75% முழுமையான ஈடுபாடுடன் இருக்கிறீர்கள் என்று வைத்து கொண்டால், உங்கள் வேலையில் இன்னும் சவாலை அதிகரிக்க நீங்கள் தயாரா என்பது தான் கேள்வி, 

அது மட்டுமின்றி இந்தச் சவாலை உங்களை சிரமப்படுத்தி கொள்ளாமல் எப்படி எதிர் கொண்டு இலக்கை அதிகரிக்கிறீர்கள் என்பது தான் சவால்.
இந்த வேலையில் உங்களால் இதனைச் செய்ய முடியும் என்றால் சரி, இல்லை என்றால் வேறு வேலை உங்களைத் தேடுகிறது என்று அர்த்தம்.

நீங்கள் முழுமையாக உணர்கிறீர்களா?

உங்கள் வேலை உங்களை உற்சாகப்படுத்து கிறதா? நீங்களாகவே உங்கள் வேலையால் புத்துணர்ச்சி யடைகிறீர்களா?

இதற் கெல்லாம் இல்லை என்ற பதில் இருந்தால், ஆம் என்ற பதில் தரும் வேலையைத் தேடலாம்.

உணவுப் பொருள் கெடாமல் இருக்க!
ஆம் என்றால் உங் களை வெற்றி மட்டுமே நெருங்கும் என்ற கூடுதல் மகிழ்ச்சியுடன் வேலையைத் தொடருங்கள்.
உங்கள் சூழல் எப்படி இருக்கிறது?

நீங்கள் செய்யும் வேலைக்கு உங்களது சூழல் சரியான ஒத்து ழைப்பை தருகிறதா? நீங்கள் செய்யும் வேலைகள் அங்கீகரிக்கப்பட்டு, நீங்கள் பட்டியலில் முந்துகிறீர்களா?

நீங்கள் செய்யும் வேலை களால் உங்கள் பணி பாதுகாப்பு உறுதியாக இருக்கிறது என்று நம்பினால் நீங்கள் கில்லி பாஸ்.

இந்த மூன்று கேள்வி களின் பதிலு க்கும் உங்கள் பதில் ஆம் என்றால் உங்கள் வேலை யில் நீங்கள் செம கெத்தாக இருக் கிறீர்கள் என்று அர்த்தம். 

இல்லை என்றால் உங்கள் வேலை இதுவல்ல, உங்களை ஆம் என்று கூற வைக்கும் வேலை உங்களுக்காக வெயிட்டிங் பாஸ்.

Tags: