குடியரசுத் தலைவர் ட்விட்டரில் இணைந்த நேரத்தில் பல்லிளிக்கும் ஊடகம் !

குடியரசுத் தலைவர் கோவிந்த் ட்விட்டரில் இணைந்த ஒரு மணி நேரத்தில் முப்பது லட்சம் பேர் அவரைப் பின் தொடர்ந்தனர்.
குடியரசுத் தலைவர் ட்விட்டரில் இணைந்த நேரத்தில் பல்லிளிக்கும் ஊடகம் !
இப்படி ஒரு சேதியை ரிபப்ளிக், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜீ ந்யூஸ், ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ், எகனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் வெளி யிட்டிருந்தன.

நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், அரசுத் துறைகள் உள்ளி ட்டவற்றின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் கணக்குகள் அரசின் டிஜிட்டல் சொத் தாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா பயன்படுத்திய @POTUS என்ற கணக்கு புதிய அதிபராக ட்ரம்ப் பதவி யேற்றுக் கொண்ட போது அவரிடம் கையளிக்கப் பட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பயன்படுத்திய @PMOIndia ட்விட்டர் கணக்கில் இருந்த பதிவுகள், 2014 தேர்தலுக்குப் பின் 

வேறு ஒரு கணக்கில் ஆர்கைவ் செய்யப்பட்டு, @PMOIndia கணக்கு பொதுப் பயன்பாட்டுக்கு விடப்பட்டு லக்னோவைச் சேர்ந்த சிறுவன் 
அதைப் பயன்படுத்தியது தெரிய வந்ததும் ட்விட்டர் நிறுவனம் தலையிட்டு அந்தக் கணக்கை பிரதமர் அலுவலகத்திற்கு மீண்டும் அளித்தது. 

இந்தக் கணக்கு முறையாக மோதிக்குக் கையளிக்கப் படாமல் இருந்ததை அப்போதைய பாஜக கடுமையாக விமர்சனம் செய்தது ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

தற்போது முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பயன்படுத்திய @RashtrapatiBhvn ட்விட்டர் கணக்கில் இருந்த பதிவுகள் @POI13 என்ற 

கணக் குக்கு மாற்றப் பட்டு அதிகாரப் பூர்வ கணக்கு புதிய தலைவர் ராம்நாத் கோவிந் த்தின் அலுவல கத்திடம் ஒப்படை க்கப்பட் டுள்ளது. அந்தக் கணக்கை முன்பு பின் தொடர்ந்தோர் இப்போதும் பின் தொடரு கின்றனர்.
சோஷியல் மீடியாவை சில காலம் பயன்படுத்துவோர் கூடப் புரிந்து கொள்ளும் இந்த உண்மையை மறைத்து விட்டுத்தான் ஊடகங்கள் இதை ஒரு செய்தியாக 

அதிலும் ஆச்சரியமான செய்தியாக வெளியிடுகின்றன என்றால் இந்த ஊடகங்கள் வழங்கும் செய்திகளின் உண்மைத் தன்மை என்ன என்ப தைப் புரிந்து கொள்ளுங்கள்.
Tags: