மெட்டல் டிடெக்டர் எப்படி வேலை செய்கிறது?

இன்று மெட்டல் டிடெக்டர்களின் கண்காணிப்புக்கு சிக்காத அதி நவீன குண்டுகள் தயாரிக்கப்படத் தொடங்கி விட்டன. 

ஆனால் முன்பு மெட்டல் டிடெக்டர்களோடு வெடிகுண்டு நிபுணர்கள் வந்தாலே மக்கள் கடும் பீதிக்கு உள்ளாயினர் என்பது உண்மை தான்.

மெட்டல் டிடெக்டரின் வட்டவடிவ அமைப்பில், இரண்டு காந்த காயில் கள் உண்டு.

டிரான்ஸ் மிட்டர் காந்தம் ஒரு நொடிக்கு ஆயிரம் என்ற அலை நீளத்தில் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.
இந்த காந்தப் புலத்தில் தட்டுப்படும் உலோகங்களைப் பற்றிய தகவல் களை, காந்த அலைகளிலிருந்து பெறும் மற்றொரு ரிசீவரான காந்தம், 

அதனை நிபுணர்களுக்கு ஹெட் போன் வழியாக ஒலி எழுப்பி எச்சரிக்கிறது.

அப்புறம் என்ன? குண்டுகளின் வயர்களை துண்டித்து தூக்கிப் போட வேண்டியது தான்.
Tags: