ராம் ரஹீமால் பாதிக்கப்பட்ட பெண் பரபர பேட்டி !

சாமியார் ராம் ரஹீம் சிங் பல பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ராம் ரஹீமால் பாதிக்கப்பட்ட பெண் பரபர பேட்டி !

2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங் கிற்கு 20 ஆண் டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. 


இந்நிலையில் அவரால் பாதிக்கப் பட்ட பெண் ஒருவர் துணிச்சலாக பேட்டி அளித்துள்ளார். அந்த பெண் கூறியிருப்பதாவது,

தேரா

எங்கள் குடும்பத் திற்கும் தேராவு க்கும் 40 ஆண்டு பழக்கம். நான் தேரா நடத்தும் பள்ளியில் ஆசிரியையாக இருந்தேன். ராம் ரஹீம் சிங் அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார்.

பலாத்காரம்

ராம் ரஹீம் சிங் இருந்த குகையை பாதுகாக்க பெண் களை வெளியே நிறுத்துவார். நானும் அந்த பணியில் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறேன். அவர் என்னையும் பலாத்காரம் செய்துள்ளார். 

இது குறித்து என் பெற் றோரிடம் தெரி விக்க அவர்கள் ராம் ரஹீம் சிங்கிற்கு பயந்து என்னை எங்கள் சொந்த கிராம த்திற்கு அனுப்பி வைத்து விட்டனர். 

பின்னர் 2001ம் ஆண்டு என் மொத்த குடும்ப மும் தேராவில் இருந்து வெளி யேறியது.

மிரட்டல்

பாலியல் பலாத் காரம் குறித்து யாரிட மும் தெரி விக்கக் கூடாது என்று ராம் ரஹீமின் ஆட்கள் எங்களை மிரட்டி வந்தனர். 


சமூக த்தின் பெயர் கெட்டு விடும் என்று பாதிக்கப் பட்ட பிற பெண்கள் யாரும் வாய் திறக்க வில்லை.

சகோதரர்

ராம் ரஹீம் சிங் பெண் களை பாலியல் பலாத் காரம் செய்வது குறித்து பிரதமர் மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி க்கு யாரோ கடிதம் அனுப்பினர். 

அது என் சகோதரர் என்று சந்தேகப் பட்டு 2002ம் ஆண்டு ராம் ரஹீம் சிங்கின் அடி யாட்கள் அவரை சுட்டுக் கொன்று விட்டனர் என்றார் அந்த பெண். 


அந்த கடிதத் தால் தான் ராம் ரஹீம் சிங் சிக்கினார் என்பது குறிப் பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings