ஆன்லைனில் மீன்... அமைச்சர் ஜெயக்குமார் !

சென்னையில் ஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்ய புதிய இணையதள சேவையை தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்துள்ளார்.
ஆன்லைனில் மீன்... அமைச்சர் ஜெயக்குமார் !
சென்னை பட்டினப் பாக்கத்தில், ஆன்லைன் மீன் விற்பனை இணைய தளத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 

ஆரோக்கிய மான உணவான மீன் மற்றும் மீன்கள் சார்ந்த மற்ற பொருட்களை தொலைப் பேசி எண் மூலமாகவும், ஆன்லைன் மூலமும் ஆர்டர் செய்து அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வர வழைக்கலாம். 

தற்போது சென்னையில் மட்டும் தொடங்கப் பட்டுள்ள இந்த சேவைக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் விரைவில், இத்திட்டம் பிற மாவட்டங்களிலும் விரிவு படுத்தப்படும்' என்று அவர் தெரி வித்தார். 

தமிழக மீனவர்களிடம் இருந்தே மீன்கள் கொள் முதல் செய்யப்பட்டு விற்கப்ப டும் எனவும், ஆன்லைன் விற்பனைக்காக ரூ.10 லட்சத்தில் மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மக்கள் தங்களுக்கு பிடித்தமான மீன் வகையை www.meengal.com என்ற இணைய தளம் மற்றும் 044- 24956896 தொலைபேசி எண் மூலம் குறைந்த பட்சம் ரூ.500-க்கு மீன்களை ஆர்டர் செய்யலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings