இறந்த பெண்ணின் உடலைக் கடித்த நாய் !

உத்தரப் பிரதேசத்தில், ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். நாட்டையே இந்தச் சம்பவம் உலுக்கியது.
இறந்த பெண்ணின் உடலைக் கடித்த நாய் !
இந்தச் சூழலில், உ.பி மாநிலம் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்து வமனைக்குள் நுழை ந்த நாய் ஒன்று, இறந்து போன ஒரு பெண்ணின் உடலைக் கடித்துத் தின்றது. 

தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு பாகங்களைக் கடித்துத் தின்றுள்ளது. இறந்து போன பெண் ணின் பெயர், புஷ்பா திவாரி. ஃபுட் பாய்ஸன் காரண மாக மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப் பட்டார். 

ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 26-ம் தேதி இரவு உயிரி ழந்தார். அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக மார்ச் சுவரியில் வைக் கப்பட்டி ருந்தது.

மருத்துவ மனைக்குள் நுழைந்த நாய் ஒன்று, மார்ச் சுவரிக்குள் சென்று பெண் ணின் உடலைக் கடித்துத்தின் றுள்ளது. 
இதைக் கண்டு அதிர்ச்ச்சியடைந்த புஷ்பா திவாரியின் உறவினர்கள், அலட்சியமாக இருந்த மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தர விட்டுள்ளதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings