ஹன்சிகாவை பின்னால் தள்ளிய கேத்தரின் !

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வராவிட்டாலும் அவ்வப்போது தலையை காட்டிச் செல்லும் கேத்தரின் தெரசா தமிழில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஹன்சிகாவின் இடத்தை பிடித்தி ருக்கிறார்.
ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி நடைபோட்ட `தனி ஒருவன்' படம் தெலுங் கில் ரீமேக் செய்யப் பட்டு நல்ல வசூலைக் குவித்தது. 

அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி - அரவிந்த் சாமி - ஹன்சிகா நடிப்பில் அடுத்த தாக வெளி யான ‘போகன்’ படமும் தற்போது தெலுங்கில் தயாராக உள்ளது. 

தமிழில் இந்த படத்தை இயக்கிய லஷ்மண் தெலுங்கு பதிப்பையும் இயக்க இருக்கிறார். இதில் ஜெயம் ரவி கதா பாத்திரத்தில் நடிக்க ரவி தேஜா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

அதே போல் தமிழில் ஹன்சிகா நடித்த கதாபாத்திரத்தில் கேத்தரின் தெரசா நடிக்க ஒப்பந்த மாகி இருக்கிறார். தெலுங்கு  ரீமேக்கில் அரவிந்த் சாமி இடம் பெற வில்லை என்பதும் உறுதி யாகி இருக் கிறது. 
ஏற்க னவே `தனி ஒருவன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான `துருவா' படத்தில் அரவிந்த் சாமியே நடித்திருந்தார். அரவிந்த் சாமி கதாபாத்திரம் மற்றும் மற்ற கதா பாத்திரங்களை படக்குழு தேர்வு செய்து வருகிறது.
Tags:
Privacy and cookie settings