புத்தமதம் மாறிய தன் மகளுக்கு கமல் வாழ்த்து !

கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் புத்த மதத்திற்கு மாறியதற்கு, கமல் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. 
புத்தமதம் மாறிய தன் மகளுக்கு  கமல் வாழ்த்து !
இருந்தால் நன்றாக இருக்கும் என கடவுள் நம்பிக்கை குறித்து தன் கருத்துக்களை முன் வைத்து வரும் கமல், தன் மகள் விஷயத்தில் எப்படி இருப்பார் என்று சொல்லவா வேண்டும்.

ஆம், சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்திற்கான புரமோ ஷன்களில் அதில் நடித்துள்ள அக்‌ஷரா ஹாசன் பங்கேற்று வருகின்றார். 

அப்படி நடந்த ஒரு நிகழ்ச் சியில் பேசிய அக்‌ஷரா ஹாசன், “நான் முதலில் நாத்தி கராக இருந்தேன். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, இருப் பினும் கடவுளை நேசிப்ப வர்களை நான் மதித்து வந்தேன். 
இப்போது புத்த மதத் திற்கு மாறி விட்டேன். அதில் வாழ் வியலோடு கலந்த பல விஷ யங்கள் உள்ள தால் அதில் என்னை இணை த்துக் கொண்டேன்.” என தெரிவித் திருந்தார்.

மகளின் மாற்றம் குறித்து கமல் தன் டுவிட் டரில், “ஹாய், அக்‌ஷு, நீ மதம் மாறி விட்டாயா. அப்படி மாறி னாலும் உன் மேல் உள்ள அன்பு மாறாது. எனக்கு. மதத்தை போன்று அன்பு நிபந் தனை அற்றது.”
Tags: