பெண்கள் தலையில் வெள்ளைத் துணி அணிவது ஏன்?

புதன் கிழமை களில் பெண்கள் தலையில் வெள்ளைத் துணி அணியும் முறையைக் கட்டாயப் படுத்து கின்ற ஒரு சட்டத் திற்கு எதிரான புதிய தொரு சமூக ஊடகப் பரப்புரை இரானில் வேகமாக பரவி வருகிறது.
பெண்கள் தலையில் வெள்ளைத் துணி அணிவது ஏன்?
எதிர்ப்பை வெளிப் படுத்துவ தன் அடையா ளமாக, தலையில் வெள்ளைத் துணியை அல்லது வெள்ளைத் துண்டை அணிந்து தங்களின் புகை ப்படங் களையும், 

காணொளி களையும் #whitewednesdays (#வெள்ளை புதன் கிழமைகள்) என்ற ஹேஸ் டாக்கை பயன்படுத்தி இரான் பெண்கள் பதி விட்டு வருகின்றனர்.

இந்தப் பரப்புரை, கட்டாய ஆடை முறைக்கு எதிரான ஆன் லைன் இயக்க மான 'மை ஸ்டீல்த்தி ஃபீரீடம்' என்பதை நிறுவிய மஷிக் அலிநஜத் என்பவரின் மூளையில் உதித்த தாகும்.

பறிபோன சுதந்திரம்

1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு, குட்டை பாவாடை, குறுகிய கையுடைய மேலாடை உள்பட மேற்குலக பாணி ஆடை களை இரானியப் பெண்கள் அணிந்து வந்தனர். 
ஆனால், மறைந்த அயதொல்லா கொமேனி அதிகாரத் திற்கு வந்த பிறகு எல்லாம் மாறி விட்டது.

"அடக்கம்" பற்றிய இஸ்லாமிய சட்டத் தின் கடுமை யான விளக்க த்தோடு பெண்கள், அவர்களின் தலை முடியை மூடுவதற்கு கட்டாயப் படுத்தப் பட்டனர். 

அது மட்டு மல்ல, ஒப்பனை செய்யாதி ருப்பதும், முழங்கால் நீள மன்டீவ் (manteau) அணிவதும் கட்டாய மானது.

1979 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தை எதிர்த்து ஒரு லட்சத் திற்கும் மேலான பெண் களும், ஆண் களும் போராட்டம் நடத்தினர். 

அப்போது தொடங்கி இது வரை இந்தச் சட்டத்திற் கான எதிர்ப்பு ஒருபோதும் அகல வில்லை.

அதிகரி க்கும் எதிர்ப்பு
பெண்கள் தலையை மூடிக் கொள் ளாமல் எடுக்கப் பட்ட 3 ஆயிரத் திற்கு மேலான புகைப் படங்களை யும், காணொளி களையும், தொடங்கிய மூன்று ஆண்டு களில், 'மை ஸ்டீல்த்தி ஃபீரீடம்' பெற்றுள்ளது.

'மை ஸ்டீல்த்தி ஃபீரீடம்' இணைய பக்கங் களில் பதிவிடப் பட்ட புகைப் படங்கள், அதிகாரி களிடம் சிக்கிக் கொள்வதை தவிர்ப்ப தற்காக ரகசிய இடங் களில் எடுக்கப் பட்டவை களாகும். 

#whitewednesdays (#வெள்ளை புதன் கிழமைகள்) என்ற ஹேஸ் டாக் ,பொது வாக பெண்கள் தங்க ளுடைய எதிர்ப்பை வெளிப் படுத்துவ தற்கு தளம் அமைத்து கொடுக் கிறது.

ஆபத்தான முயற்சி

#whitewednesdays (#வெள்ளை புதன் கிழமைகள்) என்ற ஹேஸ்டாக் தொடங்கப் பட்ட ஐந்தாவது வாரத்தில், குறிப்பிட்ட எண்ணி க்கையி லானோர் அதனை பின்பற்ற தொடங்கி விட்டனர். 
முதல் இரண்டு வாரங் களில் 200 காணொளி களுக்கு மேலாக அலி நஜத்துக்கு அனுப்பப் பட்டன. அவற்றில் சில வற்றை 5 லட்சத் திற்கு மேலானோர் பார்த்து ள்ளனர்.

பிரதான சாலை யில் நடந்து சென்று கொண்டி ருக்கும் போது காணொளி ஒன்றில் பேசியுள்ள ஒரு பெண், 

தான் தலையில் அணிந் திருந்த துணியை தளர்த்தி விட்டு, "நான் இந்தப் பரப்புரை யில் பங்கேற் பதில் உற்சாக மடைகிறேன். என் சிறை வாசம் பற்றி உங்களோடு பேச விரும்புகிறேன். 

நான் ஏழு வயதாக இருந்த போது தொடங்கி அவர்கள் என்னை ஹிஜாப் அணிய செய்தனர். அதனை நான் விரும்ப வில்லை. விரும்பவும் மாட்டேன்" என்று தெரிவித்தி ருக்கிறார்,

பெண்கள் தைரிய மாக எதிர்ப் புணர்வை காட்டு வதை பார்த்து ஆச்சரிய மடைந்துள் ளதாக அலிநஜத் தெரிவிக்கிறார். 
சில பெண்கள், தாங்கள் தெருக் களில் நடக்கிற போது, தலையில் துணி எதுவும் இல்லா மலேயே காணொளி பதிவு செய்து அனுப்பி யுள்ளனர்.

"இவ்வாறு காணொளி அனுப்பிய ஒருவரின் பாதுகாப்பு பற்றி அவரிடமே நான் கேட்ட போது, 

இரானிய பெண்கள் கடந்த 38 ஆண்டு களாக சந்தித்து வருகின்ற இந்த அடக்கு முறையின் கீழ் வாழ்வதை விட அவருடைய வேலை பறிபோவ தற்கும் தயாராக இருப்பதாக பதில ளித்தார்" என்கிறார் அலிநஜத்.

அன்பை வெளிப் படுத்தும் முயற்சி

அலி நஜத்தை பொறுத்த வரை இந்த பரப்புரை முயற்சி அன்பை வெளிக் காட்டுவது. அவர் தனியாகவே, இந்த பரப்புரையை மேற் கொண்டு வருகிறார். சில வேளைகளில் தொண்டர்கள் சிலரிடம் உதவி பெறுகிறார். 

ஆன் லைனில் காணொளி களை பதிவேற்று வதற்கு இரவு முழுவதும் அவர் தூங்காமல் இருந்த நாட் களும் உண்டு.

பெரும் பாலான புகைப் படங்களும், காணொளி களும் இரானு க்குள் வாழ்வோ ரிடம் இருந்து தான் அவருக்கு வந்துள்ளன. 

ஆனால், சௌதி அரேபியா வில் (இங்கும் தலையில் துணி அணிவது கட்டாயம்) இருந்தும் அலிநஜத் சில வற்றை பெற்று ள்ளார். 
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வில் இருந்தும் சில அனுப்பப் பட்டுள்ளன. ஆப்கானிஸ் தானில் இருந்து பதில் அனுப்பி யுள்ள பெண்ணொ ருவர், 

ஹிஜாப் அணியாத புகைப் படத்தை பதிவிட மிகவும் அச்ச முற்றாலும், இந்த பரப்புரை பணியையும், அதில் பங்கேற் போரையும் புகழ்வ தாக தெரிவித் திருக்கிறார்.

ஆப்கானிஸ் தானில் தலையில் துணி அணிவது கட்டாய மல்ல. ஆனால், பல சிறுமி யரும், பெண் களும் அதனை அணிய குடும்பத் தினரால் கட்டாயப் படுத்தப்படு கிறார்கள்.

விடுதலை க்கு வித்து

இரானியப் பெண் களுக்கு ஆதரவு அளிக்கும் ஆண் களோடு, இரான் பெண்களின் விடுதலைக் காக உழைப்ப தாக அலிநஜத் தெரிவிக் கிறார்.

"இந்தப் பரப்புரை முக்கிய மானது. இது சிறைக்கும் மற்றும் கரப்பான் பூச்சிக ளோடும் தூங்கு வதற்கு இட்டு சென்றாலும், 

அடுத்த தலை முறைக்கு உதவுவ தாக அமையும்" என்று இந்தப் பரப்புரை யில் பதிவிட்ட ஒருவர் தெரிவித் திருக்கிறார்.

இந்தப் பரப்பு ரையை தலைமை யேற்று நடத்து வதை விட இதற்கு உதவுவ தாகவே அலிநஜத் கூறுகிறார்.
இரானியப் பெண்கள், அவர்களே தலைமை யேற்றுக் கொள்வர். அவர்க ளுக்கு நான் தேவை யில்லை. அவர்க ளுக்கு ஒரு தளம் மட்டுமே தேவை. அதனை நான் வழங்கி யுள்ளேன்" என்கிறார் அவர்.

அலிநஜத் தான் மேற்கொண்டு வரும் இந்தச் செயல் பாடுகளுக் காக, சவால் களை சந்தித்து வருகிறார். 

தானாகவே நாடு கடந்து வாழும் அவர், 2009 ஆம் ஆண்டு க்கு பின்னர் இரான் செல்ல வில்லை. கைது செய்யப் படுவார் என்ற பயத்தால் இப்போது அவர் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் உள்ளார்.

இரான் ஊடக விமர்சனம்

சமீபத்திய இந்தப் பரப்பு ரையை தொடர்ந்து, இரானிள் தஸ்னிம் செய்தி நிறுவன த்தின் தலைமைப் பதிப்பாசியர், 

அலி நஜத்தை விலை மகள் என்று குறிப்பிட்டு, கணவ ருடன் அலிநஜத் இருக்கும் புகைப் படத்தை வெளி யிட்டுள்ளார்.

இரானின் இஸ்லாமிய புரட்சிப் படையோடு இணை ந்தது என்று கூறப்படும் இணைய தளமான மாஷ்ரெக் நியுஸ், தாய், தந்தை யுடன் அலிநஜத் இருக்கி ன்ற பழைய குடும்பப் புகைப் படத்தை வெளியிட் டுள்ளது. 

அதில் அவருடைய தாய், தலை முதல் கால் வரை கறுப்பு சாடோர் அணிந்தி ருக்கிறார். அந்தப் புகைப் படத்தில் தடிமனான எழுத்துக் களில் இருக்கும் குறிப்பு, "மாஷிக் உனக்கு மரணமே" என்கிறது.
இத்தகைய பய முறுத்த ல்கள் எல்லாம், பெண் களுக்கு சுதந்திர த்தை மீண்டும் வென்று கொடுப்ப தில் இருந்து தன்னை தடுத்து விடாது என்கிறார் அலிநஜத்.

தன்னுடைய இந்தப் பரப்பு ரையை ஒருங்கி ணைந்த உலகளா விய இயக்க மாக மாற்று வதற்கு தற்போது அவர் முயன்று வருகிறார். 

அதனால், உலக நாடுகளி லுள்ள பெண்கள் #whitewednesdays (#வெள்ளை புதன் கிழமைகள்) என்கிற ஹேஸ் டேக்கை இனம் காணலாம். 

எளிய, நவீன அறிக்கை வெளியிட்டு, வலுவான ஆதரவு தெரிவிக் கலாம் என்று அவர் எண்ணு கிறார்.
Tags:
Privacy and cookie settings