ஐ.சி.சி-யின் புதிய விதி என்ன?

இந்திய அணியில் என்றுமே ரோஹித் சர்மாவின் நம்பகத் தன்மையின் மேல் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவது வழக்கம். அவரது கன்சிஸ்டன்சி அப்படி. 
ஐ.சி.சி-யின் புதிய விதி என்ன?
ஒரு ஆட்டத் தில் அபாரமாக ஆடினாலும் அடுத்த ஆட்டத்தில் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து விடுவார். இந்நிலையில் காயத்தினால் நீண்ட இடை வெளிக்குப் பிறகு அணியில் இடம் பிடித்த அவர், 

சாம்பியன்ஸ் டிராபியில் முதல் ஆட்டத்தில், பாகிஸ்தா னுக்கு எதிராக 91 ரன்கள் அடித்து தன் திறமையைக் காட்டினார். முதலில் மிகவும் நிதான மாக ஆடிய அவர், கடைசி நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். 

ஆனாலும், கடைசியில் ரன் அவுட் ஆனார். 119 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து சதத்தையும் தவற விட்டார். இங்கிலாந்து மண்ணில் இது அவரது முதல் சதமாக இருந் திருக்கும்.
ரோகித் அவுட் - ஐசிசியின் விதிமுறை

இவரது ரன் அவுட் அக்டோபர் மாதத்து க்குப் பிறகு நடந்தி ருந்தால் புதிய விதி முறை களின் படி, அவுட்இல்லை என்றிருந் திருக்கும். 

37-வது ஓவரில் விராட் கோலி ஒரு ரன்னுக்கு ரோஹித் சர்மாவை அழைக்க, அவரும் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு ஓடினார். பாபர் அஸ்மான் ஸ்டம்ப் களைத் தவற விட்டாலும் விக்கெட் கீப்பர் பந்தை பிடித்து ரன் அவுட் செய்தார். 
முழு வீச்சாக டைவ் அடுத்திருந்த ரோஹித் சர்மாவின் பேட் பின்புறம் தரையில் தட்டி கிரீஸ் கோட்டுக்கு மேலே சென்றது. 

பேட் தரையில் இல்லாத தால் அவுட் கொடுக்கப் பட்டது. ரோஹித் சர்மாவின் சத வாய்ப்பு நழுவியது.

இதற்குக் காரணம் தற்போது நடை முறையில் இருக்கும் ஐ.சி.சி-யின் விதி முறை. எம்.சி.சி கிரிக்கெட் விதிமுறை 29-வது (a) பிரிவில் 

'ஒரு பேட்ஸ் மேனின் பேட்டோ அல்லது அவர் உடலின் ஏதாவது ஒரு பகுதியோ கிரீஸ் கோட்டை தாண்டி தரையில் இருந்தால் மட்டுமே அவர் safe. 
இல்லா விடில் அவர் அவுட்தான்' என்று குறிப்பி டுகிறது. இதனால் தான் இப்போது ரோஹித் சர்மா அவுட் கொடுக்கப் பட்டார்.

ஆனால் அக்டோ பரில் நடைமுறைக்கு வரும் புதிய விதி முறையின் படி ‘பௌன்சிங் பேட்’ ரன் அவுட்கள் நாட் அவுட் என்றே கருத்தப்படுமாம். 

அதாவது கிரீஸைத் தாண்டிய பின் வீரர் தரையுடன் தொடர்பை விட்டாலோ, இல்லை டைவ் அடிக்கும் போது கோட்டை தாண்டிய பின் பேட் தரையில் இல்லை என்றாலோ நாட் அவுட் கொடுக்கப் படும் என்கிறது புதிய விதிமுறை.
அக்டோபர் மாதத்து க்குப் பின்பே இந்த விதி முறை களைப் பற்றி தெளிவு வரும். புதிய விதி முறைகளில் பேட் சைஸ், பேட் தடிமன் போன்ற வற்றுக்கு எல்லைகள் விதிக்கப் பட்டுள்ளது. 

காயங் களைத் தவிர்க்க பெயில்ஸ், ஸ்டும்ப் புடன் கயிறால் கட்டப் படும். மைதான த்தில் வீரர்களின் ஒழுங்கு முறைகள் தீவிரமாக பார்க்கப் படும். 

ஒரு வீரரை மைதான த்தை விட்டு வெளி யேற்றும் அதிகாரம் நடுவர் களுக்கு கொடுக்கப் படும். எதிரணி வீரர் மீது வேண்டு மென்றே பந்தை எறிவது, 
அம்பயர் உடன் சண்டை யிடுவது போன்ற செயல் களுக்கு 5 ரன்கள் பெனால்டி தரப்படும். வன் முறையில் ஈடுபட்டால் கண்டிப் பாக அவர் வெளியேற்றப் படுவார்.

மேலும் பந்து வீசும் போதே எதிரணி What s பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யும் ‘மன்காட்’ முறை தெளிவு பெறும். 
பெண்களை ஆதரிக்க பாலின த்திற்கு பொது வான வார்த்தைகள் பயன் படுத்தப் படும். பேட்ஸ்மேன் என்ற வார்த்தையை தவிர. இது இரு பாலினத் திற்கும் பொது வானது.

இந்த விதி முறைகள் 2000-க்குப் பின் இப்போது தான் மாறுகிறது. இந்த புதிய விதி முறை களுக்கு வீரர்கள் மட்டு மல்ல ரசிகர் களும் பழகியாக வேண்டும்.
Tags:
Privacy and cookie settings